தொற்றுநோய் விழிப்புணர்வுக் காட்சியகம் திறப்பு

கொவிட்-19 கிரு­மியை சகித்­துக்­கொண்டு வாழும் நிலைக்கு சிங்­கப்­பூர் மாறிக்­கொண்­டி­ருக்­கும் வேளை­யில், இத்­த­கைய தொற்­று­நோய்­கள் அதி­கம் பர­வா­மல் இருக்க எப்­ப­டித் தங்­க­ளைப் பாது­காத்­துக்­கொள்­ள­வேண்­டும் என்­பது குறித்த விழிப்­பு­ணர்­வைப் பொது­மக்­க­ளி­டையே தொடர்ந்து ஏற்­ப­டுத்­து­வது முக்­கி­ய­மான ஒன்று.

இதைக் கருத்­திற்­கொண்டு காட்­சி­ய­கம் ஒன்­றைத் தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யம் திறந்­துள்­ளது.

ஏற்­கெ­னவே சமூ­கத்­திற்­குப் பழக்­க­மான டெங்கி, ஹெச்­ஐவி போன்ற நோய்­கள், புதி­தாக உரு­வெ­டுக்­கும் நோய்­கள் ஆகி­ய­வற்றை நிலை­யம் எவ்­வாறு கையாள்­கிறது என்­ப­தைக் காட்­சி­ய­கம் காண்­பிக்கிறது. 1913ஆம் ஆண்­டி­லி­ருந்து சிங்கப்­பூ­ரின் தொற்­று­நோய்­கள் தொடர்­பான வர­லாற்­றை­யும் இது எடுத்­துச்­சொல்­கிறது.

கொவிட்-19 நோய்ப் பர­வ­லுக்­கென காட்­சி­ய­கத்­தில் ஒரு தனி அங்­கமே உள்­ளது. தொற்­று­நோய் நிலை­யத்­தின் ஈராண்டு நிறைவை யொட்டி காட்­சி­ய­கம் திறக்­கப்­பட்­டுள்­ளது.

அதன் தொடக்க நிகழ்ச்­சி­யில் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கலந்­து­கொண்­டார்.

கொவிட்-19 போராட்­டத்­தில் தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தின் தர­மான உழைப்பு, அதன் கட்­ட­டத்­து­டன் நின்­று­விடவில்லை எனத் திரு ஹெங் பாராட்­டி­னார்.

வருங்­கா­லத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய வேறு கொள்ளை நோய்ப் பர­வல்­களைக் கையாள்­வ­தற்கு சிங்­கப்­பூ­ரின் ஆற்­றலை வலுப்­ப­டுத்த ஆய்வு மேம்­பாட்­டுத் திட்­டம் ஒன்றை உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

காட்­சி­ய­கம் நேற்று பொது­மக்களுக்­குத் திறந்­து­வி­டப்­பட்­டது. வார நாட்­களில் காலை 8.30 முதல் மாலை 4.30 மணி வரை அது திறந்­தி­ருக்­கும். அனு­மதி இல­வ­சம்.

மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­பட்­டுள்ள கொவிட்-19 நோயா­ளி­களில் சுமார் மூன்­றில் ஒரு பங்கி­னரைத் தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யம் கவ­னித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!