மதரசாவில் பயிலும் எட்டு மாணவர்களுக்கு கொவிட்-19

பிரேடல் சாலை­யில் உள்ள இர்­ஷி­யாட் ஸுரி அல்-இஸ்­லா­மியா மத­ர­சா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட எட்டு தொடக்­க­நிலை நான்கு மாண­வர்­கள் ஒரே வகுப்­பைச் சேர்ந்­த­வர்­கள்.

இந்த மத­ரசா­வில் கொவிட்-19 குழு­மம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது.

முத­லில் பாதிக்­கப்­பட்ட இரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது குறித்து கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று உறுதி செய்­யப்­பட்­டது. இம்­மா­தம் 1ஆம் தேதிக்­குப் பிறகு இவ்­வி­ரு­வ­ரும் பள்­ளிக்­குச் செல்­ல­வில்லை.

அவர்­கள் பள்­ளி­யில் இருந்­த­போது நல­மாக இருந்­த­தாக சம­யப் பள்ளி அதன் ஃபேஸ்புக்­கில் நேற்று காலை பதி­விட்­டது.

பாதிக்­கப்­பட்ட இரு மாண­வர்­

க­ளின் ஆசி­ரி­யர்­க­ளு­டன் வகுப்பு மாண­வர்­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

இதை அடுத்து, அதே வகுப்­பைச் சேர்ந்த மேலும் ஆறு பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

அப்­பள்­ளி­யைச் சேர்ந்த தொடக்­க­நிலை நான்கு மாண­வர்­கள் அனை­வ­ரும் தற்பொழுது விடுப்­பில் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. உடற்­ப­யிற்சி வகுப்­பு­கள் அனைத்­தை­யும் அப்­பள்ளி தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைத்­துள்­ளது. தொடக்­க­நிலை ஆறு மாண­வர்­

க­ளுக்­கான கூடு­தல் வகுப்­பு­கள் தற்­போது இணை­யம் மூலம் நடத்­தப்­ப­டு­கின்­றன.

செப்­டம்­பர் மாதப் பள்ளி விடு­மு­றைக்­குப் பிறகு இம்­மா­தம் 13ஆம் தேதி­யி­லி­ருந்து அப்­பள்­ளி­யில் தொடக்­க­நிலை ஒன்­றி­ருந்து ஐந்து வரை பயி­லும் மாண­வர்­க­ளுக்கு வீட்­டி­லி­ருந்து கல்வி கற்­கும் முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

விடு­மு­றைக்­குப் பிறகு தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்­வுக்­குத் தயா­ராக அப்­பள்­ளி­யின் தொடக்­க­நிலை ஆறு மாண­வர்­கள் பள்­ளிக்­குத் திரும்ப அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதற்கு முன்பு வகுப்­ப­றை­கள் முழு­மை­யா­கச் சுத்­தம் செய்­யப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும், தேவை ஏற்­பட்­டால் தொடக்­க­நிலை ஆறு மாண­வர்­

க­ளுக்­கும் வீட்­டி­லி­ருந்து கல்­வி கற்­கும் முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று பள்ளி கூறி­யது.

கிருமி நாசி­னி­யைப் பயன்­

ப­டுத்தி பள்ளி சுத்­தம் செய்­யப்

­ப­டு­வ­தாக மத­ர­சா­வின் நிர்­வா­கம் தெரி­வித்­தது.

சுகா­தார அமைச்சு, கல்வி அமைச்சு ஆகி­யவை வெளி­யிட்­டுள்ள வழி­காட்டி நெறி­மு­றை­க­ளின்­படி பாது­காப்பு இடை­வெளி, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வ­தாக பள்ளி நிர்­வா­கம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!