இடமாற்றம் செய்யப்படும் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்கும் முதலாளிகள் செலவைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்

இட­மாற்­றம் செய்­யப்­படும் பணிப்­பெண்­களை வேலைக்கு எடுக்­கும் புதிய முத­லா­ளி­கள் இல்லத் தனிமை உத்­த­ரவு, கொவிட்-19 தொடர்­பான பரி­சோ­த­னை­கள் ஆகி­ய­வற்­றுக்­கான செல­வு­களை பழைய முத­லா­ளி­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்ள வேண்­டும் என்று மனி­த­வள அமைச்சு நேற்று அறி­வித்­தது.

வேலை­யில் சேர்ந்து 12 மாதங்­

க­ளுக்­குள் பணிப்­பெண் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டால் இந்­தப் புதிய விதி­முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

அந்த 12 மாதங்­களில் அப்­

ப­ணிப்­பெண் தமக்கு எவ்­வ­ளவு நாட்­கள் வேலை செய்­தார்

என்­ப­தைப் பொறுத்து, அதன்­படி செலவை பழைய முத­லாளி ஏற்க வேண்­டும். உதா­ரணத்­துக்கு, ஆறு மாதங்­க­ளுக்­குப் பிறகு பணிப்­பெண் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டால் செலவு­ களைப் புதிய முத­லா­ளி­யும் பழைய முத­லா­ளி­யும் சரி­பா­தி­யா­கப்

பிரித்­து­கொள்ள வேண்­டும்.

செல­வைப் பகிர்ந்­து­கொள்­வது தொடர்­பாகப் பழைய முத­லா­ளிக்­கும் புதிய முத­லா­ளிக்­கும் பணிப்­பெண் முக­வை­கள் உதவ வேண்­டும் என்று அமைச்சு கூறி­யது.

செல­வுப் பகிர்­வுக்­குத் தகுதி பெற மூன்று நிபந்­த­னை­களை மனி­த­வள அமைச்சு முன்­வைத்­துள்­ளது.

வீட்­டி­லேயே இருக்­கும் உத்­த­ரவை நிறை­வேற்­றி­ய­தும் 12 மாதத்­துக்­குள் பணிப்­பெண் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டால் புதிய முத­லா­ளி­யும் பழைய முத­லா­ளி­யும் செல­வைப் பகிர்ந்­து­கொள்ள வேண்­டும்.

இல்­லத் தனிமை உத்­த­ரவு, கொவிட்-19 தொடர்­பான பரி­சோ­த­னை­கள் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்­பட்ட செல­வை­விட அதி­க­மாக பழைய முத­லா­ளி­கள் கேட்­கக்­கூ­டாது.

செலவைப் பகிர்ந்துகொள்வது குறித்து இருதரப்பினரும் கைப்பட எழுதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். தற்போதைய நிலவரப்படி, வெளிநாட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்கும் முதலாளிகள் முழு செலவையும் ஏற்க வேண்டும்.

ஆனால் தற்போது இல்லத் தனிமை உத்தரவு தொடர்பான கட்டணங்களை முதலாளிகள் முன்கூட்டியே செலுத்த வேண்டி இருப்பதால் ஒப்பந்த காலத்துக்கு முன்பே பணிப்பெண் இடமாற்றம் செய்யப்பட்டால் அது அவர்களுக்கு நியாயமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!