$1 மில்லியனுக்கு கூடுதலாக 26 வீடுகள் விற்பனை

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை விலை 14வது மாதமாக உயர்வு; புதிய சாதனை

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக மறு­விற்­பனை வீட்டு விலை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்­தி­லும் உயர்ந்­தது. மேலும், 26 வீடு­கள் குறைந்­தது தலா ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்கு கைமா­றி­ய­தாக சொத்­துச் சந்தை நிறு­வ­ன­மான 'எஸ்­ஆர்­எக்ஸ்' நேற்று தக­வல் வெளி­யிட்­டது.

வீவக மறு­விற்­பனை வீட்டு விலை, ஜூலை மாதத்தை ஒப்­பி­டு­கை­யில் ஆகஸ்ட் மாதத்­தில் 1.1% அதி­க­ரித்­தி­ருந்­தது.

எனி­னும், 2013ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் பதி­வான ஆக அதி­க­மான விகி­தத்­தை­விட கடந்த மாத விதி­கம் 0.1% குறைவு.

இந்­நி­லை­யில் வீடு­க­ளுக்­கான தேவை தொடர்ந்து வலு­வாக இருக்­கும் என்ற எதிர்­பார்ப்­பில், செப்­டம்­பர் மாதம் பதி­வா­க­வுள்ள விலை­கள், புதிய உச்­சத்­தைத் தொடக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தேவைக்­கேற்­பக் கட்­டித் தரப்­படும் ஐந்து வீட­மைப்­புத் திட்­டங்­கள் முடி­வ­டை­வ­தற்கு மேலும் தாம­த­மா­க­லாம் என்று கடந்த மாதம் தெரி­விக்­கப்­பட்­டது. நிதி நெருக்­கடி­யால் அத்­திட்­டங்­க­ளுக்­கான பிர­தான கட்­டு­மான நிறு­வ­னம் 'கிரேட்­எர்த்' திவால் நிலைக்கு ஆளா­னதே அதற்­குக் கார­ணம்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழ­லால் கட்­டு­மா­னத் துறை­யில் மனி­த­வள, விநி­யோ­கத் தடை­கள் ஏற்­பட்டு, பல வீட­மைப்­புத் திட்­டங்­கள் முடி­வ­டை­யும் நாள் தள்­ளிப் போகிறது. இத­னால், வீடு வாங்க விரும்­பு­வோர் பலர், மறு­விற்­பனை சந்­தைப் பக்­கம் திரும்­பி­யுள்­ள­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஆண்டு அடிப்­ப­டை­யில் இவ்­வாண்டு ஆகஸ்ட் மாதத்­தில் மறு­விற்­பனை விலை 13.7% அதி­க­ரித்­துள்­ளது. முதிர்ச்சி அடைந்த மற்­றும் அடை­யாத பேட்­டை­க­ளி­லும் அனைத்து அறை வகை­க­ளி­லும் இந்த அதி­க­ரிப்பு காணப்­பட்­டது.

கடந்த மாதத்­தில் மொத்­தம் 2,748 வீவக மறு­விற்­பனை வீடு­கள் கைமா­றின. அதற்கு முந்­தைய மாதத்தை ஒப்­பி­டு­கை­யில் கடந்த மாதத்­தில் 3.2% அதி­க­ரிப்பு இருந்­தது.

இதற்­கி­டையே 26 வீடு­கள், ஒவ்­வொன்­றும் குறைந்­த­பட்­சம் $1 மில்­லி­ய­னுக்கு கைமா­றி­யது. ஒரே மாதத்­தில் பதி­வான ஆக அதி­க­மான மில்­லி­யன் டாலர் சாதனை இது என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இந்த 26 வீடு­களில், ஆக அதிக விலை­யில் விற்­கப்­பட்ட மறு­விற்­பனை வீடு பீஷான் ஸ்தி­ரிட் 24ல் 'நேச்­சுரா லாஃப்ட்' பகு­தி­யி­லுள்ள வடி­வ­மைத்து, கட்டி, விற்­பனை செய்­யப்­பட்ட வீடா­கும். இது $1.28 மில்­லி­ய­னுக்கு விலை போனது.

கடந்த மாதத்­தின் ஒட்­டு­மொத்த மறு­விற்­பனை பரி­வர்த்­த­னை­களில் இந்த 26 வீடு­க­ளின் மறு­விற்­பனை 0.9% ஆகும். இவ்­வாண்­டின் முதல் எட்டு மாதங்­களில் இவ்­வாறு மில்­லி­யன் வெள்­ளிக்கு விலை போன வீடு­கள் 151 ஆகும். கடந்த ஆண்டு முழு­வ­தற்­கும் இந்த எண்­ணிக்கை 82 ஆக இருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!