79,400 பேரின் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம்

தனது சுமார் 79,400 வாடிக்­கை­யாளர்­க­ளின் தனிப்­பட்ட தக­வல்­களை இணைய ஊடுருவி­கள் திரு­டி­யி­ருக்­க­லாம் என்று மைரிபப்ளிக் தொலைத்­தொ­டர்பு நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் கைபேசி சேவை தொடர்­பி­லான தனிப்­பட்ட தக­வல்­க­ளைக் கொண்ட ஆவ­ணங்­கள் திரு­டப்­பட்­டுள்­ள­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டைய அடை­யாள எண் அட்­டை­களில் இரண்டு பக்­க­மும் உள்ள விவ­ரங்­களை ஊடு­ரு­வி­கள் பெற்­றி­ருக்­க­லாம் என்று மைரிபப்­ளிக் கூறி­யது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் அடங்­கு­வர்.

அவர்­க­ளின் வேலை சம்­பந்­தப்­பட்ட தக­வல்­களும் திரு­டப்­பட்டிருக்­க­லாம் என்று நிறு­வ­னம் சொன்­னது.

மைரிபப்ளிக்கின் வெளி­நாட்டு வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தங்­கு­மிடத்­தைக் காட்­டும் பய­னீட்­டுக் கட்­டண விவ­ரங்­க­ளை­யும் ஊடு­ரு­வி­கள் பெற்றிருக்கலாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதனால் கட்டமைப்புகளிலும் சேவைகளிலும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று மைரிபப்லிக் கூறியது. ஊடுருவல் சம்பவம் குறித்து சென்ற மாதம் 29ஆம் தேதியன்று தெரியவந்ததாக அது சொன்னது.

அதற்குப் பிறகு நிலைமையைச் சரிசெய்துவிட்டதாக நிறுவனம் குறிப்பிட்டது.

தக­வல் தொடர்பு மேம்­பாட்டு ஆணை­யம், தனி­ந­பர் தக­வல் பாது­காப்பு ஆணை­யம் ஆகிய அமைப்பு­களுக்குச் சம்­ப­வத்தைப் பற்றித் தெரி­யப்­ப­டுத்­தி­ய­தாக மைரிபப்ளிக் கூறி­யது.

இதற்கு மன்­னிப்புக் கேட்­டுக்­கொண்ட நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி மேல்­கம் ரொட்­ரி­கெஸ் மைரி­பப்­ளிக் தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளைத் தொடர்­பு­கொண்டு வரு­வ­தா­க­வும் பிரச்­சி­னை­யைச் சமா­ளிக்க அவர்­க­ளுக்­குத் தொடர்ந்து உதவி வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய சம்­ப­வம் மறு­ப­டி­யும் நிக­ழா­மல் இருக்க கட்­ட­மைப்­பு­களை­யும் செயல்­மு­றை­க­ளை­யும் மறு­ப­ரி­சீ­லனை செய்து வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தனிப்­பட்ட தக­வல்­கள் தவ­றா­கப் பயன்­படுத்­தப்­பட்­ட­தற்குத் தற்­போது ஆதா­ரம் இல்லை.

இருந்­தா­லும் அவர்­கள் எவ்­வித பண மோச­டிக்­கும் ஆளா­கா­மல் இருக்க சிங்­கப்­பூர் கடன் இலாகா­வு­டன் சேர்ந்து வாடிக்­கை­யா­ளர்­களுக்கு இல­வச நிதி கண்­காணிப்புச் சேவையை வழங்­கப்­போ­வ­தாக மைரி­பப்ளிக் தெரி­வித்­தது.

கடந்த சில மாதங்­களில் வேறு சில நிறு­வ­னங்­களும் இணைய ஊடு­ருவல் செயல்­க­ளால் பாதிக்­கப்­பட்­டன.

ஸ்டார்­ஹப் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னத்­தின் சுமார் 57,200 வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குச் சொந்­த­மான தனிப்­பட்ட தக­வல்­கள் இணை­யத்­தில் வெளி­யி­டப்­பட்­ட­தாக அந்­நி­று­வ­னம் சென்ற மாதம் தெரி­வித்­தது. தனது சுமார் 129,000 வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தனிப்­பட்ட விவ­ரங்­கள் திரு­டப்­பட்­ட­தா­கக் கடந்த பிப்­ர­வரி மாதத்­தில் சிங்­டெல் தெரி­வித்­தது.

அண்­மை­யில் தோக்­கியோ மரீன் காப்­பு­றுதி நிறு­வ­னம், பைன் லேப்ஸ் தொழில்­நுட்ப நிறு­வ­னம் ஆகி­ய­வை­யும் இணைய ஊடு­று­வல் செயல்­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!