உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 41 வீவக வீட்டில் தீ

உட்­லண்ட்ஸ் ஸ்தி­ரீட் 41 வீவக புளோக் 437ல் உள்ள வீட்­டில் தீ மூண்­ட­தால் சுமார் 10 குடி­யி­ருப்­பா­ளர்­க­ளு­டன் இரண்டு பூனை­களும் வெளி­யேற்­றப்­பட்­டன.

சம்­ப­வம் குறித்து நேற்று காலை சுமார் 11.10 மணிக்­குத் தக­வல் வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஃபேஸ்புக்­கில் குறிப்­பிட்­டது.

சம்­பவ இடத்­திற்கு வந்­த­போது முதல் மாடி­யில் இருந்த வீட்­டி­லிருந்து கரும்­புகை வெளி­யா­ன­தா­கத் தீய­ணைப்­பா­ளர்­கள் தெரி­வித்­த­னர். தீய­ணைப்­பா­ளர்­கள் வீட்­டின் முக்­கிய அறை­யில் மூண்ட தீயை அணைத்­த­னர்.

தீ மூண்ட வீட்­டி­லி­ருந்து இரண்டு பூனை­கள் மீட்­கப்­பட்­டன. மற்ற வீடு­க­ளி­லி­ருந்து சுமார் 10 குடி­யி­ருப்­பா­ளர்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­தா­கக் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பி­டப்­பட்டிருந்தது. பாதிக்­கப்­பட்ட வீட்­டில் இருந்­த­வர் புகையை சுவா­சித்­தாரா என்­பதை அறிய சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆனால் அவர் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல மறுத்­து­விட்­டார். வேறு யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­லில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!