மூன்று நாட்களில் ஏறத்தாழ 480 பேருக்குத் தடுப்பூசி

இம்மாதம் 14ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழ­மை­யி­லி­ருந்து வியா­ழக்­கி­ழமை வரை சிங்­கப்­பூர் ஆயுதப்படை­யைச் சேர்ந்த 20 இல்­லத் தடுப்­பூ­சிக் குழுக்­கள், நட­மா­டு­வ­தில் சிர­மத்தை எதிர்­கொள்­வோ­ரின் வீட்­டிற்கு நேரில் சென்று அவர்­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடும் பணி­யில் ஈடு­பட்­டன. அந்­தக் குழுக்­களில் மருத்­துவ அதி­கா­ரி­களும் மூன்­றா­வது போர்க்கால ஆத­ரவு மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த மருத்­துவ உத­வி­யா­ளர்­களும் இடம்­பெற்­ற­னர். அந்த 20 இல்­லத் தடுப்­பூ­சிக் குழுக்­களும் மூன்று நாட்­களில் ஏறத்­தாழ 480 பேருக்­குத் தடுப்­பூசி போட்­ட­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

"என் வீட்­டிற்கு ஆயு­தப்படை அதி­கா­ரி­கள் வந்து என் கண­வ­ருக்­குத் தடுப்­பூசி போடு­வர் என்று நான் சிறி­தும் எதிர்­பார்க்­க­வில்லை. தாதி­யர் அல்­லது சாதா­ரண உடை­யில் இருப்­ப­வர்­கள் வரு­வர் என்று நினைத்­தேன்," என்று ஒய்­வு­பெற்ற 78 வயது கேத்­த­ரின் டான் தெரி­வித்­தார்.

"தடுப்­பூசி போட்டுக்கொள் வோரின் எண்­ணிக்­கையை உயர்த்த அர­சாங்­கம் அனைத்து வளங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­து­கிறது," என்று மூன்­றா­வது போர்க்கால ஆத­ரவு மருத்­து­வ­ம­னைக்­குத் தலைமை தாங்­கும் அதி­கா­ரி­யான மேஜர்(தேசிய சேவை) டாக்­டர் மிசான் மரி­கான் கூறி­னார்.

கடந்த மாதத் தொடக்­கத்­தில் 33 இல்­லத் தடுப்­பூ­சிக் குழுக்­கள் இருந்­தன. அவற்­றில் நான்கு

ஆயு­தப்படை­யைச் சேர்ந்­தவை.

கடந்த வாரம் 49 இல்­லத் தடுப்­பூ­சிக் குழுக்­கள் இருந்­தன. அவற்­றில் 20 ஆயு­தப்படை­யைச் சேர்­தவை. தொடர்ந்து உதவி தேவைப்­பட்­டால் அது­கு­றித்து ஆயு­தப் படை­யி­டம் தெரி­விக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

இம்­மாத இறு­திக்­குள் இல்­லத் தடுப்­பூ­சிக்­கான முன்­ப­திவு செய்­துள்ள அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போட அமைச்சு இலக்கு கொண்­டுள்­ளது. சில இல்­லத் தடுப்­பூ­சிக் குழுக்­கள் தற்­போது பூஸ்­டர் தடுப்­பூ­சி­க­ளைப் போட்டு வரு­கின்­றன.

கடந்த வாரத்­தி­லி­ருந்து தாதிமை இல்­லங்­களில் தங்­கு­வோ­ருக்­குத் தமது குழுக்­கள் பூஸ்­டர் தடுப்­பூ­சி­ க­ளைப் போட்டு வரு­வ­தாக எட்ஜ்­டேல் மருந்­த­கத்­தின் இயக்­கு­நர் டாக்­டர் யான் ஷி யுவேன் தெரி­வித்­தார்.

"இல்­லத் தடுப்­பூசி சேவை­க­ளுக்­கான தேவை இருக்­கும்­வரை அதை வழங்க ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட பரா­ம­ரிப்­புச் சேவை­க­ளுக்­கான முக­வை­யு­டன் இணைந்து செயல்­ப­டு­வோம்," என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. கடந்த ஒரு வார­மாக நீ சூன் முகா­மில் உள்ள மூன்­றா­வது போர்க் கால ஆத­ரவு மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த ஆத­ரவு அதி­கா­ரி­க­ளு­டன் 20 ஆயு­தப் படைக் குழுக்­கள் இணைந்து செயல்­பட்­டன.

நோயா­ளி­க­ளு­டன் தொடர்­பு­கொள்­ள­வும் குழுக்­க­ளின் செயல்­பாட்­டைக் கண்­கா­ணிக்­க­வும்

ஆத­ரவு அதி­கா­ரி­கள் உத­வி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!