முழுவீச்சில் இயங்கும் மனநல இயக்கம்

மன­ந­லம் தொடர்­பாக விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­த­வும் மக்­கள் செயல் கட்­சி­யைச் சேர்ந்த 17 நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட குழு­வுக்கு ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் வான் ரிசால் வான் சக்­கா­ரியா தலைமை தாங்­கு ­கி­றார்.

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்டு 452 பேர் உயிரை மாய்த்­துக்­கொண்­ட­தாக லாப­ நோக்­க­மற்ற அமைப்­பான சிங்­கப்­பூர் அபய ஆலோ­ச­னைச் சங்­கம் அறிக்கை வெளி­யிட்­டதை அடுத்து, இம்­மா­தம் 10ஆம் தேதி­யி­லி­ருந்து 30ஆம் தேதி வரை மன­ந­ல விழிப்­பு­ணர்வு இயக்­கம் நடத்­தப்­பட்டு வரு­கிறது.

2012ஆம் ஆண்­டுக்­குப் பிறகு கடந்த ஆண்­டில் உயிரை

மாய்த்­துக்­கொண்­டோர் எண்­ணிக்கை ஆக அதி­க­மா­கப் பதி­வா­ன­தாக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, உயிரை மாய்த்­துக்­கொண்­டோர் விகி­தம் கடந்த ஆண்டு 13 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

#452TooMany என்று பெய­ரி­டப்­பட்­டுள்ள இயக்­கம், உதவி நாடும்­படி உதவி தேவைப்­ப­டு­வோரை ஊக்­கு­விக்­கிறது.

"மன­நலம் தொடர்­பான விவ­கா­ரங்­கள் அனை­வ­ரை­யும் பாதிக்­கிறது. நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் மன­வு­ளைச்­சலை வெவ்­வேறு முறை­களில் எதிர்­கொள்­கி­றோம்.

"மன­ந­லம் தொடர்­பாக நிலவி வரும் சில பிரச்­சி­னை­களை கொவிட்-19 நெருக்­க­டி­நிலை நமக்கு வெளிச்­சம் போட்­டுக் காட்­டி­யுள்­ளது," என்று டாக்­டர் வான் ரிசால் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!