ஆயிரத்தைத் தாண்டிய பாதிப்பு; 60வது கொவிட்-19 மரணம்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று அன்­றா­டப் பாதிப்பு ஆயி­ரத்­தைத் தாண்­டி­யுள்­ளது. நேற்று முன்­தின நில­வ­ரப்­படி மேலும் 1,009 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் 23ஆம் தேதிக்­குப் பிறகு இதுவே ஆக அதி­க­மான அன்­றா­டப் பாதிப்பு.

பாதிக்­கப்­பட்­டோ­ரில் 926 பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது. வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான தங்­கு­வி­டு­தி­களில் 78 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. சமூக அள­வில் பாதிக்­கப்­பட்­டோ­ரில் 259 பேர் 60 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள். வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்த ஐவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 76,792ஆக அதி­க­ரித்­துள்­ளது.

ஃபைசர் ஏஷிய பசி­பிக்­கில் புதிய கொவிட்-19 குழு­மம் உரு­வா­கி­யுள்­ளது, அங்கு 22 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களில் 20 பேர் ஊழி­யர்­கள், இரு­வர் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­கள். பாதிக்­கப்­பட்ட இந்த இடம் தடுப்­பூசி தயா­ரிக்­கப்­படும் இடம் அல்ல என்று சுகா­தார அமைச்சு உறு­திப்­ப­டுத்­தி­யது.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி 863 கொவிட்-19 நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். 105 பேருக்கு உயிர்­வாயு சுவா­சக் கருவி தேவைப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. 18 பேர் தீவிர சிசிக்­கைப் பிரி­வில் இருப்­ப­தா­க­வும் அவர்­

க­ளது உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தா­க­வும் சுகா­தார அமைச்சு கூறி­யது. கடு­மை­யா­கப் பாதிப்­பட்­ட­வர்­களில் 100 பேர் 60 வய­துக்­கும் மேற்­பட்ட மூத்த குடி­மக்­கள். இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் 60வது கொவிட்-19 மர­ணம் ஏற்­பட்­டுள்­ளது. கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 90 வயது முதி­ய­வர் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று உயி­ரி­ழந்­த­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. மாண்­ட­வர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவர் ஏற்­கெ­னவே புற்­று­நோய், இதய நோய், நிமோ­னியா ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று அவ­ரி­டம் கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டதை அடுத்து, அவர் தொற்­று­நோய்­

க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தில் அனு­ம­திக்­கப்­பட்­டார். அவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது அதே நாளன்று உறுதி செய்­யப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!