மொழியை ரசிக்க, நேசிக்க தமிழ் இளையர் விழா

மாண­வர்­கள் தமிழ்மொழி மூலம் தங்­களது கற்­ப­னைத்திறனை வெளிப்படுத்­தும் வாய்ப்பை 'தமிழ் அருவி' செய­லிக்­கான அறி­முக வகுப்பு வழங்­கி­யது. நடிப்பு, குர­லாக்­கம், குறும்­ப­டத் தயா­ரிப்பு ஆகிய அம்­சங்­களில் மாண­வர் திறனை வளர்க்க முயன்ற இந்த வகுப்பு, மெய்­நி­க­ராக நடத்­தப்­பட்­டது. இந்­நி­கழ்ச்­சி­யில் பங்­கேற்ற 42 மாண­வர்­கள், செய­லி­யைக் கொண்டு உரு­வாக்­கிய தங்­க­ளது படைப்­பு­க­ளைச் சமர்ப்­பித்­த­னர். வெவ்­வேறு பின்­பு­ல­னைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு தமிழ் மொழிக் கற்­றல் சுல­ப­மாக இருக்க வகை­செய்­வதே 'தமிழ் அருவி' செய­லி­யின் நோக்­கம் என்று அதன் நிறு­வ­னர் இலக்­கியா செல்­வ­ராஜி தெரி­வித்­தார்.

"மாண­வர்­கள் சமர்ப்­பித்த படைப்­பு­கள் முதல் படி­யா­கும். பிறகு இவை வகுப்­பு­களில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம். இது சிங்­கப்­பூர் தமிழ் மாண­வர்­க­ளின் படைப்­புப் பெட்­ட­க­மா­கும். இது­போன்ற அங்­கங்­களில் மாண­வர்­கள் பங்­கு­பெற்று தமிழை நேசிக்­கக் கற்­றுக்கொள்­வர்," என்­றார் திரு­மதி இலக்­கியா.

"வலை­யொலி தயா­ரிப்­பது எப்­படி என்­பதைச் செயலி மூலம் அறிந்­தேன். கவி­தை­கள், கட்­டு­ரை­கள் ஆகியவை இச்செய­லி­யில் இருப்­ப­தால் எனது தமிழ்த் திறன் மேம்­படும். வாய்­மொழி, எழுத்­துத் திறமை போன்­ற­வற்­றைச் சோதிக்­கும் தேர்­வு­களில் சிறப்­பா­கச் செய்ய இது உத­வும் என நம்­பு­கி­றேன்," என்று அறி­முக வகுப்­பில் பங்­கேற்ற ஏக­லை­வன் தெரி­வித்­தார்.

கைபேசி, கணினி, இணை­யம் எனத் தொழில்­நுட்ப அம்­சங்­களில் தமிழ்­மொழி புழங்­கு­வ­தற்கு அடித்­த­ள­மாக இருப்­பது தமிழ் எழுத்­து­ருக்­களே. அத்­த­கைய தமிழ் எழுத்­து­ருக்­களை நாமே எவ்­வாறு வடி­வமைக்­க­லாம் என்­பதை விளக்­கும் பட்­டறைக்கு நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழக தமிழ் இலக்­கிய மன்ற முன்­னாள் மாண­வர் சங்­கம் ஏற்­பாடு செய்­திருந்­தது.

பங்­கேற்­பா­ளர்­கள் புது­மை­யும் தனித்­து­வ­மும் கொண்ட தமிழ் எழுத்­து­ருக்­களைத் தாங்­க­ளா­கவே வடி­வ­மைக்­கக் கற்­றுக்­கொண்­ட­னர். இந்­தப் பட்­ட­றையை வழி­நடத்தி இளை­யர்­க­ளுக்கு எழுத்­துரு வடி­வமைப்­பைக் கற்­பித்­தார் உள்­ளூர் கேலிச்­சித்­திர, எழுத்­துரு வடி­வ­மைப்­பா­ளர் ஜே.எஸ்.சசி­கு­மார், 28. இவர் இது­வரை தமி­ழில் மூவகை தட்­டச்சு எழுத்­து­ருக்­களை உரு­வாக்கி உள்­ளார்.

பல சிங்­கப்­பூர் தமி­ழர்­கள் இவற்றை நாடி, பதி­வி­றக்­கம் செய்து பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

"இந்­தப் பட்­ட­றை­யின் மூலம் இளை­யர்­கள் பலர் அதி­க­ள­வில் எழுத்­துரு வடி­வமைப்­பில் ஈடு­பட வேண்­டும் என்­பதே எனது ஆசை. பட்­டறை, இளை­யர்­க­ளின் ஆர்­வத்­தைத் தூண்­டு­வது மட்­டு­மல்­லா­மல் எழுத்­துரு வடி­வ­மைப்­பில் அவர்­க­ளுக்கு இருந்த ஐயங்­க­ளை­யும் போக்­கி­யி­ருக்­கும் என நான் நம்­பு­கி­றேன்," என்­றார் சசி­குமார்.

பட்­ட­றை­யில் கலந்­து­கொண்ட இளை­யர்­களில் ஒரு­வர் ஏஞ்­சல் மேரி ஓவியா, 23. இவ­ரும் ஒரு கேலிச்­சித்­தி­ரக் கலை­ஞர், வடி­வ­மைப்­பா­ளர். தமிழ் எழுத்­து­ருக்­கள் பற்­றிய அறி­வை­யும் ஆற்­ற­லை­யும் மேம்­ப­டுத்­திக்­கொள்ள இந்­தப் பட்­ட­றை­யில் பங்­கேற்­றார்.

"என் போன்ற இளை­யர்­கள், தமிழ் தொடர்­பான பணி­க­ளைச் செய்­யும் பொழுது அது உற்­சா­கம் அளிக்­கிறது. இன்­றைய கால­கட்­டத்­தில் தமிழ் மொழிப் புழக்­கத்தை ஊக்­கு­விக்க பேச்­சுத்­த­மிழ் அதி­கம் பயன்­படுத்­தப்படு­கிறது. அதே சம­யத்­தில் இது­போன்ற எழுத்­துரு வடி­வ­மைப்­பின்­வழி எழுத்­துத்­த­மி­ழை­யும் இணை­யத்­தில் தடம் பதிக்­கச் செய்­ய­லாம்.

"மிக சுவா­ர­சி­ய­மான விதத்­தில் படைக்­கப்­பட்ட இந்­தப் பட்­ட­றை­யின் வழி தமிழ் எழுத்­து­ருக்­களை எப்­படி நவீன பாணி­யில் படைக்­கலாம் என்­ப­தைக் கற்­றுக்­கொண்­டேன். மற்­ற தமிழ் வடி­வ­மைப்­பா­ளர்­க­ளின் எண்­ணங்­க­ளை­யும் யோச­னை­க­ளை­யும் தெரிந்து­கொண்­ட­தும் பய­னுள்­ள­தாக இருந்­தது," என்­றார் அவர்.

www.tinyurl.com/sasifonts என்ற இணை­யப்­பக்­கத்­தி­லி­ருந்து மக்­கள் சசி­குமா­ரின் எழுத்­து­ருக்­களை இல­வ­ச­மாக பதி­வி­றக்­கம் செய்து பயன்­ப­டுத்­த­லாம்.

இளையரிடையே தமிழ்மொழிப் புழக்கத்தை

ஊக்குவிப்பதற்காக இம்மாதம் 4ஆம் தேதி முதல் 12ஆம்

தேதி வரை தமிழ் இளையர் விழா ஏற்பாடு செய்யப்

பட்டது. நிகழ்ச்சிகள் மூலம் மொழி மீதான ஆர்வத்தை

இளையரிடையே வளர்க்கக் கடப்பாடு கொண்டிருப் பதாகத் தெரிவித்தது ஆண்டுதோறும் தமிழ்மொழி விழாவுக்கு ஏற்பாடு செய்துவரும் வளர்தமிழ் இயக்கம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!