காரசாரமான விவாதங்கள் மூலம்...

தகவல் திரட்டு:

இந்து இளங்கோவன்,

கி. ஜனார்த்தனன்

தமி­ழில் விவா­தம் செய்­யும் ஆர்­வத்தையும் அதற்கான தளத்தையும் மாண­வர்­கள் தொடக்­கக் ­கல்­லூ­ரிக்­குப் பிற­கும் தொட­ரும் வாய்ப்பைத் தன் நிகழ்ச்சிவழி ஏற்­ப­டுத்­திக் கொடுத்­துள்­ளது நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கத் தமிழ் இலக்­கிய மன்­றம்.

‘சொல் யுத்­தம்’ என்ற மெய்­நி­கர் விவா­தப் போட்­டி­யில் மொத்­தம் எட்டு அணி­கள் பங்­கேற்­றன. போட்­டி­யின் மூன்று சுற்­று­களும் நடப்பு விவ­கா­ரங்­களை ஆராய்ந்­தன.

“எனது குழு­விற்­குத் தரப்­பட்ட தலைப்பு, ‘சமூக வர்க்கப் பிரி­வி­னை­கள்’. இன்­றைய சூழ­லுக்கு மிக­வும் ஏற்­பு­டைய ஒரு தலைப்பு இது. காலம் கா­ல­மாக சிங்­கப்­பூ­ரில் இந்­தப் பிரச்­சினை நில­வி­னா­லும் அண்மைக் கால­மாக இதற்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

“பங்­கேற்­ற­வர்­கள் தங்­க­ளது எண்­ணங்­க­ளைத் தைரி­ய­மாக வெளிப்­ப­டுத்­தி­ய­தன் மூலம் அவர்­க­ளி­டையே மாறு­பட்ட சிந்­த­னை­யும் தீர்வுகாண வேண்­டும் என்ற உத்­வே­க­மும் இருப்­ப­தைக் காணமுடி­கிறது. அது­மட்­டு­மல்ல, இந்த தலைப்பு என் மன­திற்கு நெருக்­க­மான ஒன்று. ஏனெ­னில், சமூக வர்க்கப் பிரி­வி­னை­களை வேரோடு அழிக்க வேண்­டும் என்று நினைப்­ப­வர்­களில் நானும் ஒருத்தி,” என்­றார் விவா­தப் போட்­டி­யில் பங்­கேற்ற கேத்­த­ரின் எழில்­வ­ள­வன், 21.

“சக போட்­டி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்­தும் நடு­வர்­க­ளி­ட­மி­ருந்­தும் நான் நிறைய கற்­றுக்கொண்­டேன். விவா­திக்­கும் திறன், தலைப்­பைப் பகுத்­தா­ரா­யும் திறன், எதிர் விவா­தங்­க­ளைக் கையா­ளும் உத்­தி­கள் போன்­ற­வற்றை நன்கு அறிந்துகொண்­டேன். மேலும் இது­போன்ற நிகழ்ச்­சி­களில் பங்­கேற்க ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றேன்,” என்­றார் இளையர் கேத்­த­ரின்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!