தேர்வு நெருங்கும் வேளையில் தீச்சம்பவத்தில் பாட நூல்களை இழந்த மாணவர்

புளோக் 13 மார்சிலிங் லேனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் ஏழாவது மாடி வீட்டில் வியாழக்கிழமை (செப்டம்பர் 23) ஏற்பட்ட தீச்சம்பவத்தில் தொடக்கநிலை 6 மாணவர் ஒருவர் உயிர் தப்பினார்.

ஆனால், தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) தொடங்குவதற்கு ஒருசில நாட்களே இருக்கும் வேளையில், தமது பாட நூல்கள் மற்றும் குறிப்புகளை அவர் இழந்தார்.

நல்ல வேளையாக, அவரது குடும்பத்தினரும் இரு செல்லப்பிராணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.

செப்டம்பர் 30ஆம் தேதி பிஎஸ்எல்இ தொடங்குகிறது.

தீ மூண்ட படுக்கையறையில் அந்த மாணவரின் பாட நூல்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தமது வீடு தீப்பற்றிக்கொண்டது பற்றி செய்தியறிந்தவுடன், வெளியில் இருந்த தாம் வீட்டிற்கு விரைந்ததாக அந்த மாணவரின் தந்தை கூறினார். தமது பெயரை அவர் குறிப்பிட விரும்பவில்லை.

ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான அவர், சோபாவுக்கு அடியில் இருந்த தமது செல்லப்பிராணிகளில் ஒன்றை மீட்க மட்டுமே தமக்கு நேரம் இருந்ததாக சொன்னார். அவரது மகன் ஏற்கெனவே வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

தீக்கிரையான தங்களது வீட்டிலிருந்து உடைமைகளை எடுத்து வைப்பதில் அந்த வீட்டில் இருந்தவர்கள் வெள்ளிக்கிழமை மும்முரமாக இருந்தார்.

தங்களது வீடு சரிசெய்யப்படும்வரை அவர்கள் தங்குவதற்காக வேறொரு வீட்டை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஒதுக்கியுள்ளது.

வசிப்போர் குழு நிலையத்தில் தங்கி அவர்கள் வியாழக்கிழமை இரவுப் பொழுதைக் கழித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!