‘அவர் வழியில் இன்று நானும் ஒரு மருத்துவர்’

ப. பால­சுப்­பி­ர­மணியம்

 

மருத்­து­வ­ரைப் பார்ப்­பது என்­றாலே சில சிறார்­க­ளுக்­குக் கசப்­பான ஓர் அனு­ப­வ­மாக இருக்­கும். ஆனால் தொடக்­கப்­பள்ளி பரு­வத்­தில் தனக்கு மருத்­து­வம் பார்த்­த­வரை ஒரு முன்­மா­தி­ரி­யா­கக் கருதி அவ­ரைப் போல தானும் ஒரு மருத்­து­வர் ஆக­வேண்­டும் என்று முடி­வெ­டுத்­த­வர் அஸ்­வின் சிங்­கா­ரம், 25.

சிறு­வ­ய­தில் அவ்­வப்­போது ஆஸ்­துமா தொடர்­பாக அஸ்­வின் தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­வார். அப்­போது அங்கு குழந்தை நல மருத்­து­வ­ரான இணைப் பேரா­சி­ரி­யர் டேனி­யல் கோ, நட்­பு­ற­வு­டன் பழ­கி­ய­தாக அஸ்­வின் பகிர்ந்­து­கொண்­டார்.

"மருத்­து­வப் பரி­சோ­தனை போன்றே இருக்­காது. நோயா­ளி­யுடன் பக்­கு­வ­மாக உரை­யாடி, பயத்­தைப் போக்­கி­வி­டு­வார். அவ­ரையே நான் ஒரு முன்­னு­தா­ர­ண­மா­கக் கருதி, எதிர்­கா­லத்­தில் அவ­ரைப் போன்று மற்­ற­வர்­க­ளுக்கு உதவ வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தேன்," என்று கூறி­னார் அஸ்­வின்.

ஆங்­கிலோ சீன தன்­னாட்­சிப் பள்­ளி­யில் அஸ்­வின் பயின்­ற­போது வேலைப் பயிற்சி திட்­டத்தை மேற்­கொள்­ளும் கால­கட்­டம் வந்­தது. இதற்­காக அதே தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் குழந்தை நலப் பிரி­வில் மருத்­து­வர் டேனி­யல் கோவின் செயல்­பா­டு­களைக் கூர்ந்து கவ­னித்­துக் கற்­றுக்­கொள்­ளும் வாய்ப்பை அவரே தேடிக்­கொண்­டார்.

'ஐபி' (International Baccalaureate) பாடத்­திட்­டத்தை அஸ்­வின் முடித்த பிறகு, நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­கழகத்­தின் லீ கொங் சியான் மருத்­து­வப் பள்ளி­யில் பயில விண்­ணப்­பித்­தார்.

2016ஆம் ஆண்­டில் மருத்­து­வப் பள்­ளி­யில் சேர்ந்து, முதல் இரண்டு ஆண்­டு­களில் மருத்­து­வம் தொடர்­பான பாடங்­க­ளுக்கு அப்­பால் மற்ற விருப்­பப் பாடங்­களை­யும் அவர் கற்­றுக்­கொண்­டார்.

பள்­ளி­யின் மாண­வர் மருத்­து­வச் சங்­கப் பொரு­ளா­ள­ரா­க­வும் பின்­னர் சங்­கத் தலை­வ­ரா­க­வும் பொறுப்பு ஏற்று, மாண­வர்­க­ளுக்­கென நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­வது, பாடத்­திட்­டத்­தைப் பற்றி மாண­வர்­கள் சார்­பாக பள்­ளி­யி­டம் கருத்து தெரி­விப்­பது போன்­ற­வற்­றில் ஈடு­பட்­டார்.

பட்­டப்­ப­டிப்­பின்­போது பல உள்­ளூர் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ப­வம் பெற்­ற­தில், அறுவை சிகிச்சை நிபு­ண­ராக வேண்­டும் என்ற ஆசை அவ­ருக்கு வந்­தது.

"அறுவை சிகிச்சை முறை­யைக் கையாள்­வது மிக நுட்­ப­மா­னது. அதற்கு அதி­க­ளவு அர்ப்­ப­ணிப்­பும் தேவை. அறுவை சிகிச்சை வழி நோயா­ளி­யின் பிரச்­சி­னைக்கு உட­னடி தீர்வு காண முடி­வ­தில் அதிக மனநிறைவு காண முடி­யும் என்று நம்­பு­கி­றேன்," என்­றார் அஸ்­வின்.

கொவிட்-19 சூழ­லி­லும் மருத்­து­வச் சங்­கத் தலை­வ­ராக, மாண­வர்­க­ளின் படிப்பு தடை­யில்­லா­மல் மெய்­நி­க­ராக நடத்­தப்­ப­டு­வ­தற்­குத் தான் உத­வி­யுள்­ள­தாக அஸ்­வின் கூறி­னார்.

மாறி­வ­ரும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­வ­ரத்தை சிங்­கப்­பூர் நன்கு கையாண்டு வரு­கிறது என்­றும் சுகா­தார ஊழி­யர்­க­ளின் உழைப்பை அதில் காண முடிந்­தது என்­றும் சொன்­னார் அவர்.

இவ்­வாண்டு தன் மருத்­து­வப் பட்­டத்­தைப் பெற்ற 25 வயது அஸ்­வின், ஏப்­ரல் இறுதி முதல் நான்கு மாதங்­க­ளாக இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னை­யில் பயிற்சி பெற்­று­விட்டு, தற்­போது டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் மருத்­துவ நுணுக்­கங்­க­ளைக் கற்று வரு­கி­றார்.

எதிர்­கா­லத்­தில் பொது மருத்­து­வ­மனை ஒன்­றில் சேவை­யாற்ற விரும்­பும் அஸ்­வின், மருத்­து­வர் டேனி­யல் கோவைப் போல் தானும் ஒரு­நாள் திக­ழ­வேண்­டும் என்று உறுதி கொண்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!