பேருந்துக்கு வழிவிடத் தூண்டும் மின்னியல் தொழில்நுட்பம்

ஹவ்­காங் வட்­டா­ரத்­தில் உள்ள லோரோங் ஆ சூவில் அடுத்த மாதம் பேருந்­து­கள் அரு­கில் வரு­வ­தைத் தெரி­விக்­கும் புதிய மின்­னி­யல் காட்­சிப்­ப­ல­கை­கள் வைக்­கப்­ப­ட­வுள்­ளன. பேருந்­துக்கு வழி­விட வேண்­டும் என்று வாக­ன­மோட்­டி­க­ளைத் தூண்­டு­வது அதன் நோக்­க­மா­கும்.

பேருந்­து­க­ளுக்­கான அதன் 'மெய்­நி­கர் வழி முத­லில் செல்­வ­தற்­கான முன்னுரிமை' முன்­னோ­டித் திட்­டத்தை அடுத்த மாதத்­தின் நடு­விலிருந்து வரும் ஜனவரி வரை சோதிக்­கப்­போ­வ­தாக நிலப் போக்கு­ வ­ரத்து ஆணை­யம் நேற்று கூறியது.

திட்­டத்­தின் கீழ், ஹவ்­காங் அவென்யூ மூன்றை நோக்­கிச் செல்­லும் லோரோங் ஆ சூவில் மின்­னி­யல் காட்­சிப் பல­கை­கள் வைக்­கப்­படும். பேருந்து வரும்­போது உணர் கரு­வி­க­ளைக்கொண்டு, தானா­கவே மின்­னி­யல் பல­கை­களில் ஒளி­யூட்­டப்­படும். அது பேருந்­து­க­ளுக்கு வழி­விட மற்ற வாக­னங்­க­ளைத் தூண்­டும்.

நமது சாலை­களில் கனி­வான நடத்­தை­யை­யும் சீரான பய­ணங்­ க­ளை­யும் ஊக்­கு­விக்­கும் பொருட்டு இத்­த­கைய வழி­யி­லும் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று ஆணை­யம் நேற்று அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் கூறியது.

காட்­சிப்­ப­ல­கையைச் சோதிக்­கும் பணி நேற்று தொடங்­கி­யது.

சோத­னை­கள் நடை­பெ­றும்­போது லோரோங் ஆ சூவின் இப்­ப­கு­தி­யில் இடது பக்­கம் திரும்­பும் வாக­ன­மோட்­டி­கள் எப்­போ­தும்­போல கார்­களை இடது பக்­கம் திருப்­ப­லாம் என்று ஆணை­யம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!