2024 ஆண்டுக்குள் கரிம சமநிலை காண இலக்கு

சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டம், 'நைட் சஃபாரி', 'ரிவர் சஃபாரி' ஆகிய பய­ணத் தளங்­க­ளைக் கொண்ட மண்­டாய் பகுதி, 2024ஆம் ஆண்­டுக்­குள் தன் கரிம வெளி­யேற்­றத்­துக்­கும் கரி­மத்தை இயற்கை மூலம் உள்­ளிழுக்­கச் செய்­வ­தற்­கும் இடையே சம­நிலை காண்­பதை இலக்­கா­கக் கொண்­டுள்­ளது.

மண்­டாய் பகு­தியை, சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏற்ற ஒரு பய­ணத்­துறை மைய­மாக மாற்­றும் திட்­டங்­களை வகுக்க 'மண்­டாய் பார்க் ஹோல்­டிங்ஸ்' முற்­பட்­டுள்­ளது.

அதோடு 2030ஆம் ஆண்­டுக்­குள் மண்­டாய் பகு­தி­யின் 100% எரி­சக்­தி­யும் புதுப்­பிக்­கத்­தக்க மூலங்­க­ளி­லி­ருந்து பெறப்­படும் என்­றும் நிறு­வ­னம் உறுதி அளித்­துள்­ள­தாக நேற்று அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது. தற்­போது தனக்­குக் கீழ் இயங்கி வரும் வன­வி­லங்­குப் பூங்­காக்­களில், ஆண்டு அடிப்­ப­டை­யில் இவ்­வாண்டு முதல் 1% எரி­சக்­தி­யைக் குறைக்­கும் என்ற குறிக்­கோ­ளை­யும் அது கொண்­டுள்­ளது. இதை எரி­சக்­தியை மிச்­சப்­ப­டுத்­தும் செயல்­பா­டு­கள், செயல்­மு­றை­கள் ஆகி­ய­வற்றை உரு­வாக்­கு­வ­தன் மூலம் சாத்­தி­யப்­ப­டுத்த நிறு­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.

தன் கரிம வெளி­யேற்­றத்­தில் மின்­சா­ரப் பயன்­பாடு பாதி­ய­ளவு இருந்­த­தாக நிறு­வ­னம் தெரி­வித்­தது. அதன் 'உத்­தி­பூர்வ மண்­டாய் சுற்­றுச்­சூ­ழல் நீடித்த நிலைத்­தன்மை' திட்­டத்­தில் எரி­சக்தி, தண்­ணீர் ஆகி­ய­வற்­றின் பயன்­பாட்­டைக் குறைக்­கும் வழி­மு­றை­கள் கண்­ட­றி­யப்­படும். புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்­தியை உற்­பத்தி செய்­யும் வாய்ப்­பு­க­ளை­யும் அது அதி­கப்­ப­டுத்­தும் முயற்­சி­களை எடுக்­கும் என்று கூறப்­பட்­டது.

கழி­வு­க­ளைக் குறைப்­பது, மறு­ப­ய­னீடு செய்­வது, மாற்­றுப் பயன்­பாடு அளிப்­பது போன்ற வழி­முறை­க­ளைக் கண்­ட­றி­வ­தி­லும் நிறு­வ­னம் ஈடு­படும் என்று தெரி­வித்­தது. அதன் கல்வி மற்­றும் சமூ­கத்­தைச் சென்­ற­டை­யும் திட்­டங்­களில் நீடித்த நிலைத்­தன்­மை­கொண்ட வாழ்க்­கை­முறை தொடர்­பான அறி­வு­றுத்­தலை ஒருங்­கி­ணைக்­கும் என்­றார் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி மைக் பார்க்லே.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!