பருவநிலை மாற்றம் தொடர்பில் துணைப் பிரதமர் ஹெங் இந்தப் போராட்டத்தில் இயற்கைக்கும் பங்குண்டு

பொரு­ளா­தார வளர்ச்­சி­யின் பலி­கடா­வாக இயற்கை இருக்க முடி­யாது, இருக்­க­வும் கூடாது என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இயற்­கை­யா­னது நகர வாழ்க்­கைக்கு உயி­ரூட்ட உத­வு­வ­து­டன் பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு எதி­ரான மனி­த­கு­லத்­தின் போராட்­டத்­திற்­கும் பங்­க­ளிக்க முடி­யும் என்­றார் அவர். இயற்­கை­யைப் பேணு­வது குறித்த வரு­டாந்­திர நீடித்த நிலைத்­தன்மை மாநாட்­டில் பேசிய திரு ஹெங், இயற்கை குறித்த புதி­ய­தொரு கண்­ணோட்­டத்தை வகுத்­துக்­கொள்­ளு­மாறு பேரா­ளர்­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­டார்.

கொள்கை வகுப்­ப­வர்­கள், முத­லீட்­டா­ளர்­கள், அரசு சாரா குழுக்­கள், வர்த்­த­கங்­கள் ஆகிய தரப்­பு­க­ளுக்­காக தெமா­செக் முத­லீட்டு நிறு­வ­னம் ஏற்­பாடு செய்­துள்ள இந்த மூன்று நாள் மாநாடு, மெரினா பே சேண்ட்­ஸில் நேர­டி­யா­க­வும் நேரலை­யி­லும் நடக்­கிறது. நேற்று நடை­பெற்ற இரண்­டா­வது நாள் நிகழ்ச்சி­யில் திரு ஹெங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்று உரை­யாற்­றி­னார்.

"கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைப்­ப­தற்­கான அனைத்­து­லக முயற்சி தொட­ரப்­பட வேண்­டும். எனி­னும், அது­மட்­டும் போதாது. கரி­ய­மில வாயு­வாக மாறக்­கூ­டிய கரி­மத்தை நீண்ட காலச் சேமிக்­கும் வழி­மு­றை­களை மேற்­கொள்ள வேண்­டும். இதில் இயற்கை சார்ந்த தீர்­வு­கள் பெரும் பங்­காற்­றும்," என்­றார் திரு ஹெங். கரி­மத்தை சேமிப்­பது என்­பது, பூமியை வெப்­ப­மாக்­கும் கரி­ய­மில வாயுவை (CO2) இலை, வேர், தண்டு, மண் முத­லி­ய­வற்­றில் சேமித்து வைக்­கும் மரத்­தின் திற­னைக் குறிக்­கிறது.

இயற்­கை­யைப் பாது­காப்­பது, மீட்­டெ­டுப்­பது என இயற்­கைச் சுற்­றுச்­சூ­ழல் கட்­ட­மைப்­பின் பங்­குக்கு உல­க­ளா­விய கவ­னம் அளிக்­கப்­படு­கிறது. இத­னால் வளி­மண்­டலத்­தில் கரி­ய­மில வாயு­வின் அள­வைக் குறைக்க முடி­யும்.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் இத்­தகைய இயற்கை அடிப்­ப­டை­யி­லான தீர்­வு­க­ளுக்­கான சாத்­தி­யம் மிக அதி­க­முள்­ளது. இப்­ப­கு­தி­யில் 200 மில்­லி­யன் ஹெக்­டர் காடு­கள் உள்­ளன. மேலும் சதுப்பு நிலங்­கள், கடல் தாவ­ரப் பகுதி போன்ற கடல் சார்ந்த சூழ­லில் சேமிக்­கப்­படும் நீர்­க­ரிம வள­மும் உல­கின் மிக அதி­க­ள­வில் இப்­ப­கு­தி­யில்­தான் உள்­ளது. நில அடிப்­ப­டை­யி­லான காடு­க­ளை­விட, நீர் சார்ந்த பகு­தி­கள் பல மடங்கு கரி­மத்தை உள்­ளி­ழுத்­துச் சேமிக்­கும். எனி­னும், இயற்­கை­யின் ஆற்­ற­லைப் பயன்­படுத்­த­வ­தற்­குக் கணி­ச­மான முத­லீடு தேவை என்­றார் திரு ஹெங்.

முத­லில், வலு­வான நிர்­வா­கம், நம்­பிக்கை ஆகி­ய­வற்றை அடிப்­படை­யா­கக்­கொண்ட ஒரு கரி­மச் சந்தை உரு­வாக்­கப்­பட வேண்­டும். இதன் மூலம் முத­லீ­டு­களை அதி­கரிக்­க­மு­டி­யும். இரண்­டா­வ­தாக, அனைத்­து­லக பரு­வ­நி­லைக்­குப் பங்­க­ளிக்­கும் எதிர்­ம­றை­யான அம்­சங்­க­ளைக் கணக்­கி­டு­வ­தற்­குத் தகுந்த விலை நிர்­ண­யிக்­கப்­பட வேண்­டும்.

உதா­ர­ண­மாக, கரிம வெளி­யேற்­றத்­துக்கு அதிக விலை விதிப்­பது, வனப் பாது­காப்­புத் திட்­டங்­களை மேலும் சாத்­தி­ய­மாக்­கும். இப்­போது காட்டை அழிப்­ப­தன் மூலம் பணம் சம்­பா­திக்க முடி­கிறது. ஆனால், ஒரு காடு வெட்­டப்­ப­டு­வ­தை­விட பாது­காப்­பதை அதிக லாப­க­ர­மாக்க வேண்­டும். அதை முறை­யா­கச் செய்­தால், வேளாண்மை, பயிர்­கள் ஆகி­ய­வற்­றைப் போல, இயற்கை வளங்­களில் முத­லீடு செய்­வது புதிய சொத்­தாக வகைப்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்­றார் துணைப் பிர­த­மர்.

தகுந்த கார்­பன் வரியை நிர்­ணயிப்­ப­தன் மூலம், போட்­டித்­தன்­மை­யு­டன் திக­ழும் அதே­நே­ரத்­தில் இயற்கை சார்ந்த தீர்­வு­கள் உள்­ளிட்ட நிலைத்­தன்மை முயற்­சி­களை ஊக்­கு­விக்க முடி­யும். பசுமை இயக்­கத்தை கொவிட்-19 தொற்­று­நோய் தடைப்­ப­டுத்­த­வில்லை. மாறாக அதற்கு அதிக வேகத்­தைக் கொடுத்­துள்­ளது என்­றார் திரு ஹெங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!