ஒருங்கிணைந்த சமூக பராமரிப்பு மையத்திற்காக முன்னாள் பிரதமர் கோவின் நிதித்திரட்டு

மரீன் பரேட்டில் புதிய ஒருங்கிணைந்த சமூக பராமரிப்பு மையம் கட்டப்பட உள்ளது. ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சொக் டோங், தமது இரண்டாவது நூலின் வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி இந்த மையத்தைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

2024ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த மையம், வருங்கால மரீன் பரேட் எம்ஆர்டி நிலையத்துடன் மரீன் பரேட் சமூகக் கட்டடத்தை இணைக்கும். அந்தச் சமூகக் கட்டடத்தில் தற்போது சமூக மன்றமும் நூலகமும் உள்ளன.

அத்துடன், சம்பள ஏற்றதாழ்வு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை ஆராய்வதற்கு நிதியளிக்கும புதிய அறநிறுவனமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 100க்கும் மேற்பட்ட தனிநபர்கள் 5.6 மில்லியன் வெள்ளிக்கு அதிகமாக நன்கொடை அளித்துள்ளனர்.

இந்த இரண்டு புதிய திட்டங்களை திரு கோ கடந்த வெள்ளிக்கிழமை, ‘ஸ்டேன்டிங் டால்: தி கோ சொக் டோங் யர்ஸ்’ என்ற தலைப்பிலான தமது புத்த வெளியீட்டுக்கான மெய்நிகர் நிகழ்ச்சியின்போது அறிவித்தார்.

திரு கோவின் சுயசரிதையைக் கொண்டுள்ள முதல் நூலான ‘டால் ஆர்டர்’, நவம்பர் 2018ல் வெளியிடப்பட்டபோது அது 2 மில்லியன் வெள்ளிக்கு மேல் வசூலித்தது. அந்த நிதிப்பணம், மரீன் பெரேட் குடும்பங்களை ஆதரிக்கும் ‘எடியுகிரோ’ திட்டத்திற்கும் ‘ மீடியாகார்ப் எனேபல் ஃபன்ட்’ திட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.

இவ்வாண்டு மே மாதம் வெளியிடவிருந்த இரண்டாவது நூல், கொவிட்-19 நிலவரத்தின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!