சட்டவிரோத வங்கி நடவடிக்கைகளைத் தடுக்க புதிய தளம்

பயங்கரவாத நடவடிக்கைகள், குற்றச் செயல்கள், பெரும் சீரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரித்தல் போன்றவற்றுக்கு நிதியளிக்கும் நோக்குடன் நடைபெறும் நிதிப் பரிவர்த்தனைகளுக்கு எதிரான புதிய மின்னிலக்கப் பாதுகாப்பை 2023ஆம் ஆண்டுவாக்கில் சிங்கப்பூர் பெறும்.

சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று இதனைத் தெரிவித்தது.

'கோஸ்மிக்' என்னும் பெயர்கொண்ட தகவல் மற்றும் தரவு பரிமாற்ற மின்னிலக்கத் தளத்தை தொடங்க இருப்பதாக அது குறிப்பிட்டது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், மிதமிஞ்சிய நிதியளிப்பு போன்றவற்றைத் தடுக்கும் நோக்கம் கொண்டது இத்

தளம்.

வாடிக்கையாளர்கள் அல்லது பரிவர்த்தனைகள் தொடர்பில் இடர்ப்பாடு ஏற்படும் சாத்தியத்தை சந்திக்கும் நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இடையில் உரிய நேரத்தில் பாதுகாப்பான முறையில் தகவல்

களைப் பரிமாறிக்கொள்ள 'கோஸ்மிக்' அனுமதிக்கும்.

அதுபோன்ற தகவல்கள் பரிமாற்றம் சட்டவிரோதக் கட்டமைப்புகளைக் கண்டறிந்து தடுத்து நிறுத்த நிதிச் சேவை நிறுவனங்களுக்கு உதவியாக அமையும் என்றும் இதன்மூலம் சிங்கப்பூர் நிதி மையத்தைப் பாதுகாக்கலாம் என்றும் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

'கோஸ்மிக்' மின்னிலக்கத் தளத்தை சிங்கப்பூர் நாணய ஆணையமும் ஆறு முன்னணி வங்கிகளும் சேர்ந்து உருவாக்கும். டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், சிட்டிபேங்க் மற்றும் ஹெச்எஸ்பிசி போன்றவை அந்த வங்கிகள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!