20 அடி கொள்கலன் விழுந்து விபத்து; உடல் நசுங்கி ஊழியர் மரணம்

பைனியரில் உள்ள ஒரு பணியிடத்தில் நேற்று 20 அடி கொள்கலன் விழுந்ததில், 49 வயது சிங்கப்பூரர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.


‘சைட் லோடர்’ இயந்திரத்தைக் கொண்டு கொள்கலன் ஒன்றை இறக்கியபோது, இவ்விபத்து நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.


இதன் தொடர்பில், கவனக்குறைவின்றி செயல்பட்டு மரணம் விளைவித்ததாகக் கூறி, 42 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


15, பைனியர் கிரசன்ட் எனும் முகவரியில் அமைந்துள்ள அந்தப் பணியிடத்தில் நிகழ்ந்த இவ்விபத்து தொடர்பில் நேற்றுக் காலை 9 மணியளவில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிடைத்தது.


விபத்தில் சிக்கிய ஆடவர் சுயநினைவின்றிக் கிடந்ததாகவும் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டதைக் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவப் படையினர் உறுதிப்படுத்தியதாகவும் காவல்துறை தெரிவித்தது.


இது, இவ்வாண்டில் உயிரிழப்பை ஏற்படுத்திய 30வது வேலையிட விபத்து.


இதனைத் தொடர்ந்து, விபத்து நிகழ்ந்த ‘அலைடு கன்டெய்னர் (இன்ஜினியர்ஸ் அண்ட் மேனுஃபேக்சரர்ஸ்)’ நிறுவனத்தின் பணிமனையில் கொள்கலன்களை ஏற்றி இறக்கும் பணிகளையும் ‘சைட் லோடர்’ இயந்திரங்களைப் பயன்படுத்துவதையும் நிறுத்தி வைக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!