தடுப்பூசியைத் தவிர்க்காதீர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியோருக்கு வலியுறுத்து; கிருமி தொற்றினால் மரண ஆபத்து

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத முதி­யோ­ரை கொவிட்-19 தொற்­றி­னால் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர­வேண்­டிய ஆபத்து ஆக அதி­கம். அதோடு மரண ஆபத்­தும் அவர்­களுக்­குத்­தான் ஆக அதி­கம் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று எச்­ச­ரித்­தார்.

கொவிட்-19 தொற்­றைச் சமா­ளிக்­கும் சிறப்­புப் பணிக்­குழு செய்தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய அமைச்­சர், இன்­ன­மும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருப்­போர் குறிப்­பாக முதி­யோர் உட­ன­டி­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிருமி தொற்­றி­யோ­ரில் 0.2 விழுக்­காட்டி­ன­ருக்குத் தீவிர சிகிச்சை தேவைப்­பட்­டது. 0.1 விழுக்­காட்­டி­னர் மர­ண­மடைந்­து­விட்­ட­னர் என்­பதை சிறப்­புப் பணிக்­குழு இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான திரு ஓங் சுட்­டிக்­காட்­டி­னார்.

இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­களை ஆழ்ந்து நோக்­கும்­போது தீவிர சிகிச்சை பெற்­ற­வர்­களில், மர­ண­மடைந்­த­வர்­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளின் விகி­தமே அதி­கம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

குறிப்­பாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்­ப­டக்­கூ­டிய ஆபத்து அல்­லது மர­ண­ம­டை­யக்­கூ­டிய ஆபத்து மற்­ற­வர்­க­ளை­விட 14 மடங்கு அதி­கம்.

இந்­தப் பிரி­வி­ன­ரில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத முதி­யோ­ருக்கு­தான் ஆபத்து ஆக அதி­கம் என்று அவர் குறிப்­பிட்­டார். ஆகை­யால் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத முதி­ய­வர்­கள் உட­ன­டி­யாக அதை போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் இப்­போது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத முதி­ய­வர்­களின் எண்­ணிக்கை 80,000க்கும் குறை­வாக இருக்­கிறது என்­ப­தை­யும் அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரில் தொற்று கூடு­வ­தால் முதி­ய­வர்­கள் வெளியே செல்­வதை குறைத்­துக்­கொள்ள வேண்­டும்.

கூடு­தல் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்­துக்­கொள்ள வேண்­டும் என்று நேற்­றைய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!