சிங்கப்பூருக்கு வரும் நீண்டகால வேலை அனுமதிதாரர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

சிங்­கப்­பூ­ருக்கு நவம்­பர் 1ஆம் தேதி முதல் வரும் நீண்­ட­கால அனு­ம­தி­தா­ரர்­கள் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருக்­க­வேண்­டும்.

இது வேலை அனு­ம­தி­யின் பேரில் இங்கு வரு­வோ­ருக்­கும், அவர்­க­ளைச் சார்ந்து இங்கு வரு­வோ­ருக்­கும் பொருந்­தும். படிப்பு அனு­ம­தி­யின் கீழ் இங்கு வரும் மாண­வர்­களும் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும். இருந்­தா­லும் 18 வய­துக்கு குறைந்­த­வர்­க­ளுக்கு விதி­வி­லக்கு உண்டு.

12க்கும் 18க்கும் இடைப்­பட்ட வய­துள்­ள­வர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­தும் இரண்டு மாத காலத்­திற்­குள் முழுமையாகத் தடுப்­பூசி போட்டுக்­கொள்ள வேண்டி இருக்­கும். சுகா­தார அமைச்சு நேற்று இந்த அறி­விப்­பு­களை விடுத்­தது.

சிங்­கப்­பூர் எல்லைக் கட்­டுப்­பாடு கள் தொடர்­பி­லும் பல அறி­விப்­பு­கள் இடம்­பெற்­றன. சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­க­ளைப் பொறுத்­த­வரை, இப்­போ­தைய எல்லைக் கட்­டுப்­பா­டு­கள் வரும் புதன்­கி­ழமை இரவு 11.59 மணி முதல் ஒரு­வ­ரின் கடந்த 14 நாட்­கள் தொடர்­பான பய­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யில் தீர்­மா­னிக்­கப்­படும்.

இதோடு, குறிப்­பிட்ட வரு­கை­யா­ள­ருக்­கான வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்க வேண்­டிய உத்­த­ரவுக் காலம் 14 நாட்­களில் இருந்து 10 நாட்­களாகக் குறைக்­கப்­படும். தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத பய­ணி­கள் குறிப்­பிட்ட இடங்­களில் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்டும்.

ஃபைசர் பயோ­என்­டெக், மொடர்னா அல்­லது உலக சுகாதார நிறு­வ­னம் அவ­சர பய­னீ­டாக அங்கீ ­க­ரித்து உள்ள தடுப்­பூ­சியை முற்­றி­லும் இரண்டு வாரங்­க­ளுக்கு முன் போட்­டுக்­கொண்டு இருந்­தால், அவர் முற்­றி­லும் தடுப்­பூசி போட்டுக்­கொண்­ட­வ­ராக கரு­தப்­ப­டு­வார்.

நீண்­ட­கால அனு­ம­தி­யின்­பே­ரில் வரு­வோர் அதற்­கான சான்­றி­தழை தாக்­கல் செய்­ய­வேண்­டும். நடப்பு குடி­நு­ழைவு நிபந்­த­னை­க­ளை­யும் சுகா­தார நடை­மு­றை­க­ளை­யும் அவர்­கள் நிறை­வேற்ற வேண்டியிருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!