8 வாரகால சுய பரிசோதனை: அரசு ஊழியர்களுக்காக 1.2 மி. கருவிகள்

பொதுத்­துறை அதி­கா­ரி­கள் வாரம் ஒரு­முறை என்ற கணக்­கில் இரண்டு மாதம் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­வதற்­காக 1.2 மல்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட ஏஆர்டி விரை­வுப் பரி­சோ­த­னைக் கருவிகள் ஒதுக்கி வைக்­கப்­பட்டு உள்­ளன.

அந்­தச் சுய­ ப­ரி­சோ­தனை ஏற்­பாடு பற்றி செப்­டம்­பர் 6ஆம் தேதி அறி­விக்­கப்­பட்­டது.

வேலைக்­குச் செல்ல வேண்­டிய தேவை இருக்­கின்ற, தங்­க­ளைப் பதிந்­து­கொண்டு உள்ள ஊழி­யர்­கள், வாரம் ஒரு முறை என்ற கணக்­கில் இரண்டு மாத காலம் சுய­ ப­ரி­சோ­தனை செய்­து­கொள்­ள­ வேண்­டும் என்­பது அந்த ஏற்­பாடு.

இந்­தச் செயல்­திட்­டத்­தில் பதிந்­து­கொண்­டுள்ள முத­லா­ளி­க­ளி­டம், ஒவ்­வோர் ஊழி­ய­ருக்­கும் எட்டு என்ற கணக்­கில் சுய­ ப­ரி­சோ­த­னைக் கரு­வி­கள் ஒப்­ப­டைக்­கப்­படும்.

இத்­த­கைய சுய­ப­ரி­சோ­தனை கட்­டா­ய­மில்­லாத நிறு­வ­னங்­க­ளைப் பொறுத்­த­வரை, வேலை இடத்­திற்கு வந்து வேலை பார்க்­க­வேண்­டிய ஊழி­யர்­க­ளைக் கொண்­டி­ருந்­தால் அவை இதில் சேர்ந்­து­கொள்­ள­லாம்.

சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரிய முத­லா­ளி­யான பொதுத் துறை தன்­னு­டைய 153,000 பொதுத் துறை ஊழி­யர்­க­ளுக்குத் தலா எட்டு கரு­வி­களை கொடுக்­கிறது.

16 அமைச்­சு­க­ளி­லும் 50க்கும் மேற்­பட்ட ஆணை பெற்ற கழ­கங்­க­ளி­லும் பணியாற்றும் அதி­கா­ரி­க­ளுக்­காக 1.2 மில்­லி­யனுக்­கும் மேற்­பட்ட கருவி­களை அது வழங்கு­கிறது.

இத­னி­டையே, சமூ­கத் தொற்று வேகமாகி வரு­வ­தைக் கருத்­தில்கொண்டு பொதுத் துறை­யில் காலக்­கி­ரம முறைப்­படி ஊழி­யர்­ சுய பரி­சோ­தனை ஏற்­பாடு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது என்று பொதுச் சேவைப் பிரிவு கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.

இடை­வி­டா­மல் வழக்­க­மாக பரிசோதனை செய்­து­கொள்­வ­தால் தொற்று இருந்­தால் உடனே தெரி­ய­வ­ரும். கிருமி தொற்­றி­யவரை உட­ன­டி­யாக தனி­மைப்­ப­டுத்தி தொற்று பர­வா­மல் தடுத்து, வேலை இடத்­தைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க வழி இருக்கும் என்று அது மேலும் குறிப்­பிட்­டது. ஊழி­யர்­கள் சுய­ ப­ரி­சோ­தனை செய்து­கொள்ள வேண்­டும் என்று, கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் இணைத்­ தலைவரான வரத்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், சென்ற மாதம் நட­ந்த செய்தி­யா­ளர் சந்­திப்­பின்­போது வலி­யு­றுத்­தி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!