கடப்பிதழ் பெற ஆயிரக்கணக்கான விண்ணப்பம்

இம்­மா­தம் 1ஆம் தேதி­யில் இருந்து வழங்­கப்­படும் கடப்­பி­தழ்­கள் பத்து­ ஆண்­டு­க­ளுக்­குச் செல்­லு­ப­டி­யா­கும் என்­ப­தால், கடப்­பி­தழ்­க­ளைப் புதுப்­பிக்க சிங்­கப்­பூ­ரர்­கள் விரை­கின்­றனர்.

முதல்­நா­ளான நேற்றே தனது இணை­ய­வா­யில் வழி­யாக கிட்­டத்­தட்ட 2,500 கடப்­பி­தழ் விண்­ணப்­பங்­கள் வந்­து­சேர்ந்­த­தாக குடி­நுழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் தெரி­வித்­தது.

இவ்­வாண்டு ஜன­வரி முதல் சரா­ச­ரி­யாக நாள்­தோ­றும் வழங்­கப்­பட்ட கடப்­பி­தழ்­க­ளைக் காட்­டி­லும் இது நான்கு மடங்­கிற்­கும் அதி­கம்.

கொவிட்-19 பர­வ­லால் அனைத்­து­ல­கப் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டதை அடுத்து, கடந்த ஆண்டு கடப்­பி­தழ் கோரி விண்­ணப்­பித்­தோர் எண்­ணிக்கை ஏறக்­கு­றைய 60% குறைந்­தது.

சென்ற ஆண்டு ஜன­வரி முதல் ஆகஸ்ட் மாதம்­வரை 231,000 கடப்­பி­தழ்­கள் வழங்­கப்­பட்ட நிலை­யில், இவ்­வாண்­டின் அதே கால­கட்­டத்­தில் அந்த எண்­ணிக்கை 137,000 ஆகக் குறைந்­தது.

கடப்­பி­தழ் விண்­ணப்­பங்­கள் கூடி­யி­ருப்­பது, அனைத்­து­ல­கப் பய­ணம் மேற்­கொள்ள மக்­கள் ஆர்­வத்­து­டன் இருப்­ப­தைக் காட்டு­கிறது என்று சுற்­றுப்­ப­யண நிறு­வ­னங்­கள் கூறின.

அத்­து­டன், ஆண்­டி­று­தி­யில் அமெ­ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­க­ளுக்­குச் செல்­வது தொடர்­பில் அதி­க­மானோர் தங்­க­ளைத் தொடர்­பு­கொண்டு விசா­ரித்­த­தா­க­வும் அவை குறிப்­பிட்­டன.

பத்­தாண்­டு­க­ளுக்­குச் செல்­லத்­தக்க கடப்­பி­தழ்­கள் சிங்­கப்­பூ­ரர்­களுக்கு வச­தி­யாக இருக்­கும் என்­றும் செல­வைக் குறைக்­க­வும் உத­வும் என்­றும் சொன்­னார் திரு­வாட்டி சுமதி ராஜேந்­தி­ரன், 32.

வரும் டிசம்­பர் மாதத்­தில் சொகுசுக் கப்­பல் பயணம் மேற்­கொள்­ளத் திட்­ட­மிட்­டுள்ள நிலை­யில், தம் ஆறு வயது மக­னின் கடப்­பி­தழை அவர் புதுப்­பிக்­க­வுள்­ளார்.

ஆயி­னும், 16 வய­துக்­கும் குறைந்த சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கடப்­பி­தழ் ஐந்­தாண்­டு­க­ளுக்கு மட்­டுமே செல்­லு­ப­டி­யா­கும்.

அதே­வே­ளை­யில், இப்­போது 70 வெள்­ளி­யாக கடப்­பி­தழ் விண்­ணப்­பக் கட்­ட­ணத்­தில் எந்த மாற்­ற­மும் செய்­யப்­ப­ட­வில்லை.

கடப்­பி­தழ் வைத்­தி­ருப்­பது கட்­டா­ய­மல்ல என்­றும் கடப்­பி­தழ் காலா­வ­தி­யாகி, அதைப் புதுப்­பிக்­கா­வி­டில் அப­ரா­தம் விதிக்­கப்­படாது என்­றும் ஆணை­யம் தெரி­வித்­தது.

ஆணை­யத்­தின் இணை­யத்­தளம் (www.ica.gov.sg) வழி­யா­கக் கடப்­பி­த­ழுக்கு விண்­ணப்­பிக்­க­லாம். இம்­மா­தத்­தில் இருந்து, குறிப்­பிட்ட 27 அஞ்­சல் நிலை­யங்­களில் தங்­க­ளது கடப்­பி­தழை அல்­லது அடை­யாள அட்­டை­யைச் பெற்றுக்கொள்ளும் சிங்­கப்­பூ­ரர்­கள், அதற்­கா­கக் கூடு­தல் கட்­ட­ணம் செலுத்த தேவை­ இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!