சிராங்கூன் ரோடு ஐஓபி வங்கியில் பணம் அனுப்­பும் இயந்­தி­ர சேவை

இந்­தி­யா­விற்கு எந்­நே­ரத்­தி­லும் உடனே பணத்தை அனுப்ப விரும்பு­வோ­ருக்கு வச­தி­யாக 'இந்­தி­யன் ஓவர்­சிஸ் பேங்க்' (ஐஓபி) வங்கி, புதி­தாக பணம் அனுப்­பும் இயந்­தி­ரத்­தைத் திறந்­துள்­ளது.

சிராங்­கூன் ரோட்­டி­லுள்ள வங்­கிக் கிளை­யில் செப்­டம்­பர் 24ஆம் தேதி­யன்று அமைக்­கப்­பட்ட புதிய இயந்­தி­ரம், எந்­தப் பய­னீட்­டா­ள­ருக்­கும் வச­தி­யாக பணத்தை அனுப்­பும் வித­மாக வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அந்த வங்கி தெரி­வித்­தது.

இந்­தி­யர்­கள் வேலை பார்க்­கும் அலு­வ­ல­கங்­கள் இந்த இயந்­தி­ரத்­திற்கு அரு­கில் இருப்­ப­தால் பலர், நினைத்த நேரத்­தில் இங்கு வந்து பணம் அனுப்­ப­லாம் என்­றது வங்கி. இந்த இயந்­தி­ரம் 24 மணி நேர­மும் இயங்­கு­வ­தால் எந்த இந்­திய வங்­கிக் கணக்கை வைத்­தி­ருக்­கும் வாடிக்­கை­யா­ளர்­களும் நெரி­சலை தவிர்த்து இயந்­தி­ரத்­தைப் பயன்­படுத்­த­லாம். கூடு­தல் செல­வின்றி பயன்­ப­டுத்­தக்­கூ­டிய இந்த இயந்­தி­ரத்­தின் பாது­காப்­பும் மேம்­பட்­டுள்­ளது. தட்­டச்­சுப்­ப­லகை மின்­னி­லக்க வடி­வில் இருப்­ப­தால் மோச­டிக்­கான வாய்ப்­பு­களும் குறை­யும் என்று வங்கி கூறி­யது. இதன் செயலி வடி­வத்­திற்­கான அனு­ம­தியை வங்கி சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தி­டம் கேட்­டி­ருப்­ப­தாக வங்கி கூறி­யது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!