‘ஃபிக்கா’: உள்துறை அமைச்சு மறுப்பு

ஃபிக்கா என்று அழைக்­கப்­படும் வெளி­நாட்டு தலை­யீட்­டைத் தடுப்­ப­தற்­காக முன்­மொ­ழி­யப்­பட்ட சட்ட மசோ­தா­வில், அதன் கீழ் பிறப்­பிக்­கப்­படும் உத்­த­ர­வு­கள், பிரச்­சி­னைக்கு ஏற்ற பொருத்­த­மான அள­வில் இருக்க வேண்­டும் என்ற குறிப்பு இருப்­ப­தாக உள்­துறை அமைச்சு கூறி­யுள்­ளது.

ஃபிக்கா சட்ட மசோ­தா­வில் வரை­யப்­பட்­டுள்ள மொழியை மூத்த வழக்­க­றி­ஞர் ஹர்­பி­ரீத் சிங் நேஹல் நேற்று முன்­தி­னம் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் விமர்­சித்­தி­ருந்­தார்.

ஃபிக்கா சட்ட மசோ­தா­வின் கீழ் அமைச்­சர் கையா­ளும் விவ­கா­ரம், பொது­ந­லன் சார்ந்­ததா என்­ப­தைத் தீர்­மா­னிக்­கும் அள­வு­கோல் மிகக் குறை­வாக உள்­ள­தாக திரு சிங் கூறி­னார்.

அமைச்­சர் தமது அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­வது பொது ­ந­லன் காக்­கப்­படும் என்று கரு­தி­னால் போதும். அக்­க­ருத்து நியா­ய­மா­ன­தாக இருக்க வேண்­டும் என்றும் ஃபிக்கா­வின் கீழ் பிறப்­பிக்­கப்­படும் உத்­த­ரவு, விவ­கா­ரத்­தின் தன்­மைக்கு ஏற்ற பொருத்­த­மான அள­வில் இருக்க வேண்­டும் என்­றும் தற்­போ­தைய நகல் ­ம­சோதா குறிப்­பி­ட­வில்லை என்று திரு சிங் தெரி­வித்­தார்.

ஆனால், திரு சிங் கூறி­யது உண்­மை­யல்ல என்று உள்­துறை அமைச்சு கூறி­யது. பொருத்­த­மான அள­வில் உத்­த­ரவு இருக்க வேண்­டும் என்று ­ம­சோ­தா­வில் உள்­ள­தாக அது குறிப்­பிட்­டது.

இவ்­வே­ளை­யில், வெளி­நாட்­டில் ஆய்­வு­களை மேற்­கொள்­ளும், அனைத்­து­லக ஆய்­வுச் சஞ்­சி­கை­களில் ஆய்­வுக் கட்­டு­ரை­களை எழு­தும், வெளி­நாட்டு உத­வி­நி­தி­யைப் பெறும் ஆய்­வா­ளர்­கள் ஃபிக்கா ம­சோ­தா­வுக்­குப் புறம்­பா­கச் செயல்­பட்­ட­வர்­க­ளா­கக் கரு­தப்­பட மாட்­டார்­கள் என்­றும் அமைச்சு தெளி­வுப்­ப­டுத்­தி­யது. அது குறித்து அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டது.

ஆய்­வா­ளர்­க­ளான செரி­யன் ஜார்ஜ், சொங் ஜா ஈயன், லிண்டா லிம், தியோ யோ யென் ஆகி­யோர் அக்­கெ­டி­மியா. எஸ்ஜி தளத்­தில் எழு­தி­ய­ தலையங்கத்துக்கு அது பதி­ல­ளித்­தது. தற்­போது உள்­ள­வாறு மசோதா ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால், தற்­போது ஊக்­கு­விக்­கப்­படும் நட­வ­டிக்­கை­கள் திடீ­ரென்று சட்­டச் சிக்­கல்­களை ஏற்­ ப­டுத்­து­ப­வை­யா­கக் கரு­தப்­படும் என்று அவர்­கள் கூறி­யிருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!