புதிய பசுமைத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் உள்ளூர் நிறுவனங்களுக்கு கூடுதல் உதவி

பசு­மைத் தொழில்­நுட்­பங்­களை உரு­வாக்­கும் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வும் எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பின் திட்­டம் ஒன்று மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

நிறு­வ­னங்­க­ளுக்­கான நிதி உத­வித் திட்­டம் - பசு­மைப் பிரிவு என்­பது திட்­டத்­தின் பெய­ரா­கும்.

கழிவு, வளங்­க­ளின் பய­னீடு, கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் ஆகி­ய­வற்­றைக் குறைப்­ப­தற்­கான தீர்­வு­களை உரு­வாக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வு­வது திட்­டத்­தின் இலக்­கா­கும்.

இந்நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் அளிப்­ப­தால் வங்­கி­க­ளுக்கு ஏற்­ ப­டக்­கூ­டிய இட­ரில் 70 விழுக்­காட்டை இத்திட்­டம் ஏற்­றுக்­கொள்­கிறது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அக்­டோ­பர் முதல் தேதி தொடங்­கிய மேம்­ப­டுத்­தப்­பட்ட திட்­டம், வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும்.

மாசற்ற எரி­சக்தி, மறு­ப­ய­னீடு செய்­யும் பொரு­ளி­யல், பசுமை உள்­கட்­ட­மைப்பு, மாசற்ற போக்­கு­வ­ரத்து போன்ற துறை­களில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு திட்­டம் உத­வும்.

பசு­மைத் தொழில்­நுட்­பங்­களை உரு­வாக்­கும் புத்­தாக்க நிறு­வ­ன­ங் கள் புதிய எல்­லை­க­ளைத் தொடும் என்­றும் புதிய தொழில்­நுட்­பங்­களை உரு­வாக்­கு­கை­யில் கூடு­தல் இடர்­களை எதிர்­நோக்­கும் என்­றும் எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பின் தலைமை நிர்­வாகி பிங் சியோங் பூன் தெரிவித்தார்.

இது­போன்ற திட்­டங்­க­ளால் மற்ற நிறு­வ­னங்­களும் பசு­மைத் தீர்வு­களை ஏற்­றுக்­கொள்­ளும் என்­றும் உல­க­ளா­விய வாய்ப்­பு­க­ளைக் கைப்­பற்­றும் என்­றும் திரு இங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!