தோட்டக்கலை மீதான ஆர்வம் தொழிலானது

ப. பாலசுப்பிரமணியம்

வீட்டில் முதன்முதலில் அந்திமல்லி செடியுடன் தோட்டக்கலை ஆர்வத்தையும் திறனையும் நீரூற்றி வளர்த்து வந்தார் க. சிவகாமி.

இன்று இவர் பலருக்கும் நகர்ப்புற விவசாயத்தைக் கற்றுத் தரும் பயிற்றுவிப்பாளராக வளர்ந்துள்ளார்.

இவ்வாண்டின் சுற்றுப்புறத்திற்கான அதிபர் விருதைப் பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்றில் இவர் தற்போது பணிபுரிகிறார். தோட்டக் கலை நிறுவனமான எடிபல் கார்டன் சிட்டி கடந்த புதன்கிழமை இவ்விருதைப் பெற்றது.

சிங்கப்பூரின் சுற்றுப்புற நிலைத்தன்மைக்கு முக்கிய பங்காற்றியுள்ள தனிநபர்கள், அமைப்புகள், கல்வி நிலையங்களை உயரிய சுற்றுப்

புறத்திற்கான அதிபர் விருது கெளரவிக்கின்றது.

அமைப்புகள் பிரிவில், 40 விருது பரிந்துரைகளிலிருந்து எடிபல் கார்டன் சிட்டி அமைப்பு, டிபிஎஸ் வங்கி, பிஸ்ஏ நிறுவனம் ஆகியவை இவ்விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டன.

திருமதி சிவகாமி பணியாற்றும் எடிபல் கார்டன் சிட்டி அமைப்பு, உணவகங்கள், ஹோட்டல்கள், பள்ளிகள், அலுவலகக் கட்டடங்கள் என இதுவரை 260க்கும் மேற்பட்ட இடங்களில் தோட்டங்களை உருவாக்கியுள்ளது.

குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் உள்ள அதன் பண்ணையில் பல காய்கறி வகைகளை வளர்த்து, உணவகங்களுக்கு விநியோகம் செய்து, அவற்றை வளர்ப்பது குறித்த பட்டறைகளையும் நடத்தி வருகிறது அமைப்பு.

தொழில் மாற்றம்

தோட்டக்கலையில் உள்ள இவரது ஆர்வம் வீட்டிலிருந்து தொடங்கியது. இவரின் தாயார் கற்பூரவல்லி, கருவேப்பிலை போன்ற பல வகையான செடிகளை வீட்டில் பராமரிப்பவர்.

ஒருமுறை வீட்டில் தாமும் அந்தி மல்லி (Four 'o' clock flower) பூக்களை வளர்க்க முயன்றார் சிவகாமி. ஆனால் அது பலனளிக்கவில்லை.

பின்னர் வீட்டின் அருகில் இருக்கும் சமூகத் தோட்டத்தைப் பராமரிப்பவரிடம் ஆலோசனை கேட்டு செயல்பட்டார். வெற்றிகரமாக ஊதா நிற அந்திமல்லி பூ பூத்தது.

அதுவே இவர் ஆர்வத்துக்கு விதையாக இருந்தது. என்றாவது ஒரு நாள் இது தமது தொழிலாக வேண்டும் என்று சிவகாமி விரும்பினார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறப்பு தேவைகள் உள்ள சிறுவர்

களுக்கு ஆசிரியராகப் பணியாற்றிய பின், எடிபல் கார்டன் சிட்டி அமைப்பில் நகர்ப்புற விவசாயத்தைப் பற்றி பொதுமக்களுக்கு கற்றுத் தரும் வேலைக்கு இவ்வாண்டு மே மாதத்தில் சேர்ந்தார் திருமதி சிவகாமி, 35.

பயிற்றுவிப்பாளர் பணி

எளிதில் பாதிக்கப்படக்கூடிய இளையர்கள், சிறப்புத் தேவையுள்ள மாணவர்கள் போன்ற சமூகத்தின் வெவ்வேறு பிரிவினர்களுக்கு இவர் தோட்டக்கலை பற்றியும் அதன் நுணுக்கங்களையும் சிவகாமி விளக்கி வருகிறார்.

டர்பன் சாலையில் உள்ள 'ஆ‌ஷ்ரம்' என்னும் போதைப் புழங்கி களுக்கான மறுவாழ்வு இல்லத்திற்கு அண்மையில் சென்று இல்லவாசிகளுக்கு அறுவடை செய்ய கற்றுக்கொடுத்ததில் சிவகாமி திருப்தி அடைந்தார்.

பயிற்றுவிப்பதைத் தவிர, வாரம் இரு நாட்கள் தோட்டப் பராமரிப்பிலும் இவர் ஈடுபடுகிறார்.

"செடிகள், காய்கறிகளை வளர்ப்பதே ஒரு சோதனை முயற்சிதான். அதிலும் எங்கள் அமைப்பின் தோட்டத்தில் பல்வேறு செடிகளை மாறி மாறி வளர்க்கிறோம். இதுபோன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபடுவதால் புதிய விஷயங்களைக் கற்க வாய்ப்பு கிடைக்கிறது. இதுவே இப்பணியை நான் விரும்புவதற்கான காரணம்," என்றார் சிவகாமி.

"தேவையான அனைத்து உணவு பொருட்களும் பேரங்காடியில் எளிதில் கிடைத்துவிடுவதால் அவை எங்கிருந்து வருகின்றன என்பதை நாம் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் கொவிட்-19 கிருமித்தொற்றால், வீட்டிலிருந்தவாறு செடிகளைப் பராமரிக்கும் போக்கு இப்போது அதிகரித்துள்ளது. இது ஆக்ககரமான மாற்றம்," என்று குறிப்பிட்டார் திருமதி சிவகாமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!