செய்திக்கொத்து

வெள்ள அபாயத்தைக் குறைக்க இயற்கைத் தீர்வு குறித்த ஆய்வு

வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க இயற்கைத் தீர்வுகள் எவ்வாறு உதவக்கூடும் என்பதைக் கணிக்க நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் 'ஈஓஎஸ்' எனப்படும் சிங்கப்பூர் உலக ஆய்வுக்கூடத்தின் ஆய்வாளர்கள் ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.

உதாரணமாக, காடுகளால் எவ்வாறு வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும், காடுகளை அகற்றினால் எத்தகைய பொருளியல், உயிர் இழப்பு ஏற்படும் போன்றவற்றைக் கணிப்பது இலக்கு. பருவநிலை மாற்றத்தைக் கையாள சிங்கப்பூர் இயற்கைத் தீர்வுகளை நாடும் வேளையில் இந்த ஆய்வு இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்து கற்றல் குறித்து இவ்வாரம் முடிவெடுக்கப்படும்

தொடக்­கப்பள்ளி மாண­வர்­களுக்கான வீட்­டி­லி­ருந்து கற்­கும் திட்டத்தை கூடுதல் நாட்களுக்கு நீட்­டிப்­பது குறித்து இவ்வார இறுதி­யில் முடி­வெ­டுக்­கப்­படும் எனக் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார். தொடக்கநிலை ஒன்று முதல் ஐந்து வரை­யி­லான மாண­வர்­கள், தற்போது நடப்பில் இருக்கும் திட்டம் முடிந்தவுடன் அடுத்த வாரம் திங்­கட்­கி­ழ­மை­யன்று மீண்­டும் பள்­ளிக்­குச் செல்­ல­வேண்­டும்.

சென்ற மாதம் 27ஆம் தேதி­யிலி­ருந்து நாளைவரை இருந்த திட்­டம் நடப்­பில் இருக்­கும் எனக் கல்வி அமைச்சு முத­லில் அறி­வித்­தது. பின்னர் திட்­டம் நாளை மறு­தி­னம் வரை நீட்­டிக்­கப்­பட்­டது. வரும் வெள்­ளிக்­கி­ழமை சிறுவர் தினம். பள்ளி ஆசி­ரி­யர்­களும் ஊழி­யர்­களும் தொடக்­கப்பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்­வு­களில் கவ­னம் செலுத்த வகை­செய்ய இது குறித்து உடனே முடி­வெ­டுக்­க­வில்லை எனத் திரு சான் சொன்­னார்.

2,057 கொவிட்-19 சம்பவங்கள், ஆறு மூத்தோர் மரணம்

சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி புதிதாக 2,057 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், கிருமித்தொற்றுக்கு ஆளான 68 வயதுக்கும் 91 வயதுக்கும் உட்பட்ட ஆறு மூத்த சிங்கப்பூரர்கள் மரணமடைந்தனர்.

மாண்டோரில் ஐவர் ஆண்கள், ஒருவர் பெண். அவர்களில் நால்வர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், இருவர் போட்டுக் கொள்ளாதவர்கள். ஐவருக்கு ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. ஒருவருக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!