‘ஃபைசர், மொடர்னா தடுப்பூசி எடுத்தோரில் 0.5 விழுக்காட்டினருக்குக் கிருமித்தொற்று’

ஃபைசர், மொடர்னா ஆகிய நிறு­வனங்­க­ளின் தடுப்­பூ­சியை முழு­மை­யா­கப் போட்­டுக்­கொண்­ட­வர்­களில் சுமார் 0.5 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார். அதே வேளை­யில் சினோ­வேக் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான இத்­த­கைய விவ­ரங்­கள் தற்­போது இல்லை என்று அவர் குறிப்­பிட்­டார்.

சினோ­வேக் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டோ­ரின் எண்­ணிக்கை குறை­வாக இருப்­பது இதற்­குக் கார­ணம் எனத் திரு ஓங் சொன்­னார். சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொ­கை­யில் இரண்டு விழுக்­காட்­டி­ன­ருக்­கும் குறை­வா­னோர் மட்­டுமே இந்­தத் தடுப்­பூ­சி­யைப் போட்டுக்­கொண்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

எனி­னும், ஃபைசர், மொடர்னா தடுப்­பூ­சி­க­ளைப்போல் சினோ­வேக் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்டோ­ருக்கு மீண்­டும் கிருமித்­தொற்று ஏற்­படும் வாய்ப்­பு­கள் உள்­ள­தாக சிலி போன்ற நாடு­களி­லி­ருந்து வந்த அனைத்­து­ல­கத் தக­வல்­கள் காட்­டு­கின்­றன. ஆனால் ஒருவர் மோச­மாக நோய்­வாய்ப்­படுவதி­லிருந்து சினோ­வேக் தடுப்­பூசி பாது­காக்­கும் என்று அமைச்­சர் ஓங் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரில், 'எம்­ஆர்­என்ஏ' முறை­யைப் பயன்­ப­டுத்­தும் ஃபைசர், மொடர்னா தடுப்­பூ­சி­கள், டெல்டா வகை கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­ப­டு­வ­தைத் தவிர்ப்­ப­தில் சுமார் 40 விழுக்­காடு ஆற்­றல்மிக்­கவை எனத் தக­வல்­கள் தெரி­விக்­கின்றன. அதே, வேளை­யில், டெல்டா வகை கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் மோசமாக நோய்­வாய்ப்­ப­டு­வ­தி­லிருந்து ஒரு­வ­ரைப் பாது­காப்­ப­தில் இவை 64விருந்து 88 விழுக்­காடு ஆற்­றல்மிக்­கவை என்று முன்­னதாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!