‘ஏஆர்டி’ சாதனங்களுக்கு 11,000 நிறுவனங்கள் விண்ணப்பம்

அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து 'ஏஆர்டி' கொவிட்-19 பரி­சோ­த­னை சாத­னங்­க­ளைப் பெற்­றுக்­கொள்ள 11,000 நிறு­வ­னங்­கள் விண்­ணப்­பித்­துள்­ள­தாக சுகா­தார அமைச்சு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் தெரிவித்­தது. இவற்­றில் 4,200 நிறு­வ­னங்­கள் ஏற்­கெ­னவே சாதனங்­க­ளைப் பெற்­றுக்­கொண்டதாகவும் இதர நிறு­வ­னங்­கள் இவ்­வார இறு­தி­க்கும் பெற்றுக்­கொள்­ளும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இல­வ­ச­மாக வழங்­கப்­படும் இச்­சா­த­னங்­கள், வேலை­யி­டத்­திற்­குச் செல்­லும் ஊழி­யர்­க­ளுக்­குக் கொடுக்­கப்­படும். இந்த சாத­னங்­க­ளைக் கொண்டு ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­படும். இது, எட்டு வாரங்­க­ளுக்கு நீடிக்­கும். ஊழி­யர்­கள் வீட்­டில் சொந்­த­மாக தங்­க­ளைச் சோதித்­துக்­கொள்­ள­லாம் அல்­லது வேலை­யி­டங்­களில் சோதித்துக்கொள்ளலாம் என்று சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டது. பரி­சோ­த­னை­களை எப்­படி மேற்­கொள்­வது என்­பதை நிறு­வ­னங்­கள் முடி­வு­செய்­ய­லாம் என்­றும் அமைச்சு கூறி­யது.

நிறு­வ­னங்­க­ளுக்­கான இந்­தப் பரி­சோ­தனைத் திட்­டம் எட்டு வாரங்­க­ளுக்கு நடப்­பில் இருக்­கும் என்று கொவிட்-19க்கு எதிரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­குழு சென்ற மாதம் ஆறாம் தேதி­யன்று அறி­வித்­தது. 16 அமைச்­சு­கள், 50க்கும் அதி­க­மான ஆணை பெற்ற கழகங்கள் ஆகி­ய­வற்­றில் வேலை செய்­யும் அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்­கென 1.2 மில்­லி­யன் சாத­னங்­கள் ஒதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ம்ஸ் தெரி­வித்­தி­ருந்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!