உயிரிழந்த கட்டுமான நிறுவன இயக்குநர் பாதுகாப்பு உபகரணம் அணிந்திருக்கவில்லை

டன்­னர்ன் ரோட்­டில் உள்ள பங்­களா வீட்­டின் மறு­சீ­ர­மைப்­புப் பணி­யின்­போது உய­ரத்­தி­லி­ருந்து கீழே விழுந்­தால் அது உயி­ருக்­கும் ஆபத்­தாக அமைந்­து­வி­டும் என்று ஜேஎம்­எஸ் கன்ஸ்ட்­ரக்­‌ஷன் தெரிந்து வைத்­தி­ருந்­தது.

ஆனால், மரண விசா­ர­ணை­யில் அந்­நி­று­வ­னம் அந்த ஆபத்­து­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை என்று நேற்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­நி­று­வ­னத்­தின் இயக்­கு­ந­ரான 53 வயது கோ கொக் ஹெங், பிப்­ர­வரி 10ஆம் தேதி அன்று 38 யூனி­வர்­சிட்டி வாக்­கில் உள்ள அந்த வீட்­டின் இரண்­டாம் மாடி­யி­லி­ருந்து, 4.7 மீட்­டர் உய­ரத்­தி­லி­ருந்து, விழுந்து மாண்­டார்.

மாடிப்­படி அருகே விழுந்­த­போது அவ­ரது மூக்­கி­லி­ருந்­தும் வாயி­லி­ருந்து ரத்­தம் கசிந்­தது.

டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் பிற்­ப­கல் 12.45 மணிக்கு அவர் இறந்­து­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. மலே­சி­யா­வி­லி­ருந்து வந்த சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான திரு கோ, ஜேஎம்­எஸ் கன்ஸ்ட்­ரக்­‌ஷனின் இயக்­கு­நர்­களில் ஒரு­வர்.

மனி­த­வள அமைச்சு அங்கு நடந்­து­கொண்­டி­ருந்த பணி­கள் அனைத்­தை­யும் நிறுத்­தும்­படி அந்­நி­று­வ­னத்­துக்கு உத்­த­ர­விட்­டது.

அமைச்­சின் வேலை­யிட பாது­காப்பு மற்­றும் சுகா­தா­ரப் பிரி­வைச் சேர்ந்த மூத்த புல­னாய்வு அதி­காரி இங் சி ஹுவி, மாண்ட திரு கோவும் மற்­ற­வர்­களும் அங்­கி­ருந்த பாது­காப்பு உப­க­ர­ணங்­களை அணிந்­தி­ருக்­க­வில்லை என்று நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

உய­ரத்­தி­லி­ருந்து விழு­ப­வர்­களையோ விழும் பொருட்­க­ளையோ பிடிக்க பாது­காப்பு வலை­களும் அங்கு பொருத்­தப்­ப­ட­வில்லை என்­றும் அவர் தெரி­வித்­தார்.

விபத்து நிகழ்ந்த நாளன்று பணி­களை மேற்­கொள்ள ஜேஎம்­எஸ் கன்ஸ்ட்­ரக்­‌ஷன் நிறு­வ­னத்­துக்கு உரி­மம் வழங்­கப்­ப­ட­வில்லை.

மேல்­மா­டி­ய­றை­யில் பணி­கள் நடந்­து­கொண்­டி­ருந்­தன. அவ்­வ­றை­யின் தரை­யில் ஓட்­டை­கள் இருந்­த­தா­க­வும் அவை ஒட்டுப்பல­கை­களால் மூடப்­பட்­டி­ருந்­த­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது.

ஓட்­டை­க­ளைச் சரி­யாக மூட கூடு­தல் ஆணி­க­ளை­யும் ஒட்டுப்பல­கை­க­ளை­யும் பயன்­ப­டுத்­து­மாறு ஊழி­யர்­க­ளி­டம் திரு கோ கூறிய சில நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு அங்கு பெரிய சத்­தம் ஒன்றைக் கேட்­ட­தாக அங்­கி­ருந்­தோர் தெரி­வித்­துள்­ள­னர். அமர்ந்­த­ நி­லை­யில் மாடிப்­படி அரு­கில் விழுந்து கிடந்த திரு கோவுக்கு ஊழி­யர்­கள் முத­லு­தவி வழங்­கி­னர்.

அவர் எவ்­வாறு விழுந்­தார் என்­பதை அங்கு பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த ஆறு ஊழி­யர்­களும் பார்க்­க­வில்லை.

அவர் விழுந்து கிடந்த விதத்தை வைத்து, ஒட்­டுப்­ப­ல­கை­க­ளைச் சரி செய்­யும்­போது அவர் விழுந்­தி­ருக்­க­லாம் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. அந்­நி­று­வ­னத்­துக்கு எதி­ராக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளபோவ­தா­கக் குறிப்­பிட்ட மனி­த­வள அமைச்சு அது குறித்து விவ­ரங்­கள் எதை­யும் வெளி­யி­ட­வில்லை.

இச்­சம்­ப­வம் தொடர்­பான தமது தீர்ப்பை மரண விசா­ரணை அதி­காரி ஆதம் நக்­கோடா அடுத்த மாதம் 9ஆம் தேதி அறி­விப்­பார் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!