காதலியின் மகளை கர்ப்பமாக்கிய ஆடவர்

காதலியின் வயது குறைந்த மகளைக் கர்ப்பமாக்கியதை 29 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒப்புக்கொண்டார். அப்போது அந்தச் சிறுமிக்கு 14லிருந்து 15 வயதாக இருந்தது.

கடந்த ஆண்டு மே 15ஆம் தேதி பெண் குழந்தை ஒன்றை அச்சிறுமி பெற்றெடுத்தாள்.

அந்தச் சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார். சிறுமியின் அடையாளத்தைக் காக்க அவரைக் கர்ப்பமாக்கிய ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியின் தாயாரும் அந்த ஆடவரும் 2015ஆம் ஆண்டில் சந்தித்தனர். 2016ஆம் ஆண்டில் சிறுமியும் அவரது தாயாரும் அந்த ஆடவருடன் வசிக்கத் தொடங்கினர்.

அந்த ஆடவரை அச்சிறுமி தமது தந்தையாகக் கருதியதாக தெரிவிக்கப்பட்டது. அச்சிறுமி பாசத்துக்காக ஏங்கியதாகவும் சொந்த தந்தை சிறையில் இருந்ததால் அவரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி 10லிருந்து 12 வயதாக இருந்தபோது வேறொரு குடும்ப உறுப்பினரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை அச்சிறுமி அனுபவித்திருந்ததால் அவருக்கு உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணங்கள் இருப்பதாக குழந்தை வழிகாட்டுதல் மருந்தகம் கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி குறிப்பிட்டது.

திருமணமாவதற்கு முன்பு பிறந்த விவரம் தமது குழந்தைக்குத் தெரியவந்தால் அது தம்மை வெறுக்கும் என்ற பயமும் சிறுமிக்கு இருந்ததாக அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் தந்தை பற்றிய விவரங்களை அச்சிறுமி முதலில் தெரிவிக்கவில்லை. ஆனால் 11 நாட்கள் கழித்து குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்ய குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்துக்குச் அவர் சென்றபோது அந்த ஆடவரின் குற்றச்செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

அந்த ஆடவருக்கு அடுத்த மாதம் 29ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!