ஆறு மாதங்களாகியும் ஆள் கிடைக்கவில்லை; 27% பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை

கால்­வாசி காலிப் பணியிடங்கள் ஆறு­மா­தங்­க­ளுக்­கும் மேலாக நிரப்­பப்­ப­டா­மல் உள்­ளன என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்து இருக்­கி­றார்.

பல்­வேறு திட்­டங்­கள்­மூ­லம் ஊழி­யர்­க­ளுக்கு மறு­ப­யிற்சி அளிக்­க­வும் திறன்­களை மேம்­ப­டுத்­த­வும் நட­வடிக்­கை­கள் எடுக்­கப்­பட்­ட­போ­தும், இன்­னும் 27% பணி­யி­டங்­கள் ஆறு மாதங்­க­ளுக்­கு­மேல் காலி­யாக இருப்­பதை அண்­மை­யத் தர­வு­கள் காட்டு­கின்­றன.

கடந்த ஜூன் மாத நில­வரப்­படி, வேலை­யில்­லாத ஒரு­வர்க்கு 1.63 வேலை என்ற விகி­தத்­தில் காலிப் பணி­யி­டங்­கள் இருந்­த­தாக டாக்­டர் டான் குறிப்­பிட்­டார்.

ஆனா­லும், அவற்­றில் பல­வும் கட்­டு­மா­னத் துறை­யைச் சேர்ந்­தவை என்­றும் கொவிட்-19 பர­வல் கார­ண­மாக விதிக்­கப்­பட்ட எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக அத்­து­றை­யில் மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை நில­வு­வ­தா­க­வும் அவர் சுட்­டி­னார்.

"ஆயி­னும், காலிப் பணி­யி­டங்­கள் பெருகி, அவை நிரப்­பப்­ப­டா­மலேயே இருந்­தால், ஊழியர் சந்தையில் வேலை­யி­டங்­களுக்­குப் பொருத்­த­மான திற­னா­ளர்­க­ளைக் கண்­ட­றி­வது சிர­ம­மாகி­வி­டும்," என்று டாக்­டர் டான் சொன்­னார்.

ஒவ்­வொரு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கப் பேட்­டைக்­கும் என, 24 புதிய எஸ்­ஜி­ஒற்­றுமை வேலை­கள், திறன்­கள் மையங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­தாக அவர் கூறினார்.

அத்­து­டன், 40 மற்­றும் அதற்­கு­மேல் வய­து­டைய ஊழி­யர்­களும் நீண்­ட­கா­ல­மாக வேலை­யின்றி இருப்­போ­ரும் உடற்­கு­றை­யுள்­ளோ­ரும் வேலை தேட உத­வும் வகை­யில் 'அடெக்கோ' மனி­த­வள நிறு­வ­னம் பணி­ய­மர்த்­துப் பங்­கா­ளி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தச் சேவை­கள் மூலம் கிட்­டத்­தட்ட 44,000 பேர் வேலை தேடிக்­கொண்­ட­னர்.

ஒட்­டு­மொத்­த­மாக, இவ்­வாண்டு ஜூலை இறு­தி­வரை உள்­ளூர்­வாசி­களில் 128,000 பேர் வேலை­வாய்ப்­பை­யும் திறன்­ப­யிற்சி வாய்ப்­பு­க­ளை­யும் பெற்­ற­னர்.

குறிப்­பாக, வாழ்க்­கைத்­தொ­ழில் மாற்­றும் திட்­டங்­கள் மூலம் அதி­க­மா­னோர் பணி­யில் சேர்ந்­து உள்­ளதை சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி கண்­டுள்­ளது. அவற்­றின் வாயி­லாக, 14,000க்கும் மேற்­பட்ட உள்­ளூர்­வாசி­க­ளுக்கு ஆத­ரவு கிடைத்­தது.

இத்­த­கைய திட்­டங்­கள் மூல­மாக வேலை­யில் சேர்ந்த பத்­துப் பேரில் ஒன்­பது பேர், ஈராண்­டு­க­ளுக்­குப் பிற­கும் வேலை­யில் நீடித்­த­னர். அவர்­களில் பத்­துப் பேரில் ஏழு பேர்க்கு முந்­திய ஊதி­யத்­தைவிட கூடு­தல் ஊதி­யம் கிட்­டி­யது.

ஆனா­லும், காலிப் பணி­யி­டங்­களை நிரப்­பு­வ­தில் சவால்­கள் நீடிப்­ப­தாக டாக்­டர் டான் கூறி­னார்.

எடுத்­துக்­காட்­டாக, ஊதி­யம் அல்­லது வேலைச் சூழல், வேலை தேடு­வோரை ஈர்க்­கப் போது­மா­ன­தாக இல்லை என்­ப­தால் சில பணி­யி­டங்­கள் நிரப்­பப்­பட அதி­கக் கால­மா­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

இத­னால், தொழில் நிறு­வ­னங்­கள் தங்­க­ளது வேலைச் செயல்­முறை­களை, வேலைப் பொறுப்­பு­களை அல்லது தங்­க­ளது உத்­தி­களை மறு­வ­டி­வமைப்பு செய்ய வேண்­டி­யி­ருக்­க­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

இத்­த­கைய சூழ­லில், தனது 'உற்­பத்­தித்­தி­றன் தீர்­வு­கள் மானி­யத்' திட்­டம் மூல­மாக நிறு­வ­னங்­களுக்கு சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி கைகொ­டுக்­கிறது. முன்­அ­னு­மதி பெற்ற வேலை மறு­வ­டி­வ­மைப்பு ஆலோ­ச­கர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றும் நிறு­வ­னங்­க­ளுக்கு அத்­திட்­டம் ஆத­ரவு வழங்­கு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!