தனியார் பாதுகாவல் அதிகாரிகளைப் பாதுகாக்க சட்டத்திருத்தம்

துன்­பு­றுத்­தல்­களில் இருந்­தும் இழிவுபடுத்துவதில் இருந்தும் பாது­கா­வல் அதி­கா­ரி­க­ளைப் பாது­காக்­கும்­வி­த­மாக, தனி­யார் பாது­காப்­புத் தொழில்­து­றைச் சட்­டத்­தில் திருத்­தங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இது தொடர்­பான விவா­தத்­தின்­போது பேசிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், பாது­கா­வல் அதி­கா­ரி­களுக்கு மேம்­பட்ட பயிற்சி வழங்­கப்­பட வேண்­டும் என்­றும் கோரி­னர்.

அத்­து­டன், தாங்­கள் துன்­பு­றுத்­தப்­படு­வ­தைத் தடுக்­கும்­வி­த­மாக பாதுகாவல் அதிகாரிகள் தங்களது உட­லில் படக்­க­ருவி அணிய வேண்­டும் என்­றும் எம்.பி.க்கள் யோசனை கூறி­னர்.

புதிய சட்­டத்­தி­ருத்­தங்­க­ளின்­படி, தனி­யார் பாது­காப்­புத் தொழில்­துறைச் சட்­டத்­தில் மூன்று புதிய குற்றங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ளன.

வேண்­டு­மென்றே பாது­கா­வல் அதி­கா­ரியைத் துன்­பு­றுத்துவது, அச்­ச­மூட்­டு­தல் அல்­லது துய­ரத்­திற்கு உள்­ளாக்­கு­வது, பாது­கா­வல் அதி­காரி ஒரு­வ­ரைத் தாக்­கியோ அல்லது முரட்­டுத்­த­ன­மாக நடந்­து­கொண்டோ அவ­ரைக் கட­மை­யாற்­ற­வி­டா­மல் தடுப்­பது, அப்­படி அவர் தமது கட­மையை ஆற்­றும்­போது வேண்­டு­மென்றே காயம் விளை­விப்­பது ஆகி­ய­வையே அம்­மூன்று குற்­றங்­கள்.

இத்­த­கைய குற்­றச் செயல்­களில் ஈடு­ப­டு­வோர்க்­குக் கடு­மை­யான, அதி­க­பட்ச தண்­ட­னை­கள் விதிக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

பாது­கா­வல் அதி­கா­ரி­கள் ஓய்வு­எடுக்கும் இடங்­க­ளுக்­குக் குறைந்­த­பட்­சத் தர­நி­லை­க­ளைக் கட்­டா­ய­மாக்­கு­வது உட்­பட அவர்­க­ளுக்­கான வேலை­யி­டச் சூழலை மேம்­ப­டுத்த இன்­னும் அதி­கம் செய்ய வேண்­டும் என்று அங் மோ கியோ குழுத் தொகுதி எம்.பி. டேரல் டேவிட் ஆலோ­சனை கூறி­னார்.

கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழல், பாதுகாவல் அதிகாரிகள் துன்புறுத்தப்படும் சம்பவங்களை மோசமாக்கி இருக்கலாம் என்றும் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!