செய்திக்கொத்து

பத்து மணி நேர விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட மசோதா

நாடாளுமன்றத்தில் பத்து மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற விவாதத்திற்குப்பின் 'ஃபிக்கா' எனப்படும் வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. 75 எம்.பி.க்களின் ஆதரவுடன் இரவு 11.15 மணியளவில் மசோதா நிறைவேறியது. பாட்டாளிக் கட்சி மற்றும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் 11 எம்.பி.க்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நியமன

எம்.பி.க்கள் இருவர் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. மசோதா தொடர்பில் பாட்டாளிக் கட்சி முன்மொழிந்த சில திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அரசியல் கட்சியின் செயற்குழு அல்லது அதுபோன்ற நிர்வாக அமைப்பின் உறுப்பினரையும் உள்ளடக்கும் வகையில் அரசியல் சார்ந்த முக்கிய நபர்களின் பட்டியலை விரிவுபடுத்த வேண்டும் என்பதும் அவற்றில் ஒன்று. சிங்கப்பூரின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீடுகளைத் தடுக்கும் சட்டம் அரசாங்கத்திற்கு அதிகமான அதிகாரத்தை வழங்குவதாக அமைந்துள்ளது என்றும் அதனால் அரசாங்கத்தின் பொறுப்புடைமையை உறுதிசெய்ய நீதித்துறையின் வலுவான கண்காணிப்பு தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் வலியுறுத்தினார்.

உட்குறை உரைப்போர் உதவி கோரலாம்

உட்குறை உரைப்போர் (whistle-blowers) தங்கள் முதலாளிகளால் பாதிக்கப்பட்டதாக, குறிவைக்கப்பட்டதாக அல்லது பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகக் கருதினால், அவர்கள் உதவிகோரி மனிதவள அமைச்சை அல்லது நடுநிலையான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்களுக்கான முத்தரப்புக் கூட்டணியை அணுகலாம் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். அதன்பின் அமைச்சு அல்லது முத்தரப்புக் கூட்டணி அந்தப் புகார்கள் குறித்து விசாரித்து, முதலாளிமீது அமலாக்க நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கும். அத்தகைய நிகழ்வுகள் அரிதாகவே இடம் பெறுவதாகக் குறிப்பிட்ட டாக்டர் போ, வேலையிடப் பாகுபாட்டைச் சுட்டிக்காட்டியதால் பணிநீக்கம் செய்யப்படும் சூழல் உட்பட, காரணமின்றி பணிநீக்கம் செய்யப்படுவதில் இருந்து ஊழியர்களைச் சட்டம் பாதுகாத்து வருவதாகவும் சொன்னார். முத்தரப்புக் கூட்டணியின் நடுநிலையான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்களின்படி, வேலையின்போது எல்லாச் சூழல்களிலும், ஊழியர்கள் அனைவரும் தகுதி அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். உட்குறை உரைப்போரைப் பாதுகாத்தல் உட்பட வேலையிடத்தில் நியாயமாக நடந்துகொள்வது தொடர்பில் சட்டம் இயற்றுவதற்கான சாத்தியம் குறித்து ஒரு குழு இப்போது ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. பாலினம், வயது, இனம், சமயம், உடற்குறை ஆகியவை காரணமாக பாகுபாடு காட்டப்படுவதை எதிர்கொள்ளும் விதமாக முத்தரப்புக் கூட்டணியின் வழிகாட்டி நெறிமுறைகள், சட்டமாக இயற்றப்படும் என்று இவ்வாண்டு தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் லீ சியன் லூங் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!