சில சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு இன்று முதல் வாடகைத் தள்ளுபடி

தனி­யார் வர்த்­த­கச் சொத்­து­களில் இயங்­கும் சில சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­கள், லாப நோக்­கில்லா அமைப்­பு­கள் ஆகி­ய­வற்­றுக்கு இன்று முதல் வாடகைத் தள்­ளு­படி கடி­தங்­கள் அனுப்­பப்­படும். சட்ட அமைச்சு சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்­கும் அமைப்­பு­க­ளுக்­கும் கடி­தங்­களை அனுப்­பும்.

'ரென்­டல் வெய்­வர் ஃபிரேம்­வர்க்' எனப்­படும் வாடகை தள்­ளு­படி திட்டத்தின்கீழ் இந்த நட­வடிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது. இதன்­படி வர்த்­த­கச் சொத்­து­க­ளின் உரிமை­யா­ளர்­கள் வாட­கைக்­குத் தங்­க­ளின் இடங்­களில் இயங்­கும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கும் லாப நோக்­கில்லா அமைப்­பு­களுக்­கும் இரண்டு வார காலத்­திற்கு வாடகைத் தள்­ளு­படி அளிக்­க­வேண்­டும். திட்­டத்­திற்­குத் தகு­தி­பெ­றும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் அமைப்­பு­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

திட்டம் நேற்று நடப்­புக்கு வந்­தது. உயர்த்­தப்­பட்ட இரண்­டாம் கட்ட விழிப்­பு­நிலை நடப்­பில் இருக்கும்­போது வாடகை சார்ந்த பொறுப்­பு­களை அர­சாங்­கம், சொத்து உரி­மை­யா­ளர்­கள், தகு­தி­பெ­றும் வாட­கை­தா­ரர்­கள் ஆகிய முத்­தரப்பும் சரி­ச­ம­மா­கக் கையாள்­வதைக் இத்திட்டம் உறு­தி­செய்கிறது.

இதன் தொடர்­பில் கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்டத்­தில் சென்ற மாதம் திருத்­தங்­கள் செய்­யப்­பட்­டன. வாடகை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் இரண்­டா­வது முறை­யாக வழங்­கீடு பெற்ற வாட­கை­தாரர்­க­ளுக்கு அஞ்­சல்­வழி கடி­தங்­கள் அனுப்­பப்­படும் என்று சட்ட அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை­யில் குறிப்­பிட்­டது.

கடி­தங்­க­ளைப் பெற்­ற­வு­டன் வாடகைத் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளதாக அர்த்­தம் கிடையாது. கடிதம் கிடைத்­த­வு­டன் சம்­பந்­தப்­பட்ட வாடகை­தா­ரர்­கள் 28 நாட்­க­ளுக்­குள் கடி­தத்­தின் நகல்­க­ளை­யும் இதர சில ஆவ­ணங்­க­ளை­யும் தாங்­கள் வாட­கைக்­குப் பயன்­ப­டுத்­தும் இடங்­க­ளின் சொத்து உரி­மை­யாளர்­க­ளுக்கு அனுப்­ப­வேண்­டும். அதற்­குப் பிறகே வாடகைத் தள்ளுபடி செய்­யப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!