சிக்கலான சூழலில் மனவுறுதியோடு செயல்பட்ட சுரேஷ் குமார் கோவிந்தராஜுவுக்கு விருது

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழலி­லும் மன­வு­று­தி­யு­டன் செயல்­பட்ட விருந்­தோம்­பல் துறை ஊழி­யர்­களுக்கு விருது வழங்கி கௌரவிக்­கப்­பட்­டுள்­ளது.

விருது பெற்ற 69 பேரில் ஒருவர் 54 வயது திரு சுரேஷ் குமார் கோவிந்­த­ராஜு.

இவர் வேலை செய்த 'அமரா சிங்­கப்­பூர்' ஹோட்­டல், சென்ற ஆண்டு கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான வெளி­நாட்டு ஊழியர்­க­ளைத் தனி­மைப்­படுத்­தும் வச­தி­யாக மாற்­றப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­கள் தாங்­களே சமைத்து உண்­ண­வேண்­டும் என்று எண்­ணி­ய­போது, அவர்­களுக்கு உத­விக்­க­ரம் நீட்­டி­னார் திரு சுரேஷ். ஊழி­யர்­க­ளுக்கு உதவு­வ­தற்­காக தான் வேலை செய்­து­கொண்­டி­ருந்த செந்­தோசா தீவில் இருக்­கும் 'அமாரா சேங்­சு­வரி ரிசோர்ட் செந்­தோசா' ஹோட்­ட­லி­லி­ருந்து ஊழியர்­கள் தனி­மைப்­ படுத்­தப்­பட்ட தஞ்­சோங் பகார் ஹோட்­ட­லுக்கு பணியிடம் மாற விருப்­பம் தெரி­வித்­தார். அங்­கி­ருந்த 250 வெளி­நாட்டு ஊழியர்­க­ளுக்கு உத­வும் குழு­வில் இடம்­பெற திரு சுரேஷ் எண்­ணம் கொண்­டி­ருந்­தார்.

அவ்­வே­ளை­யில் சிங்­கப்­பூ­ரில் அது­வரை காணாத எண்­ணிக்­கை­யில் பல­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. "உங்களுக்கும் தொற்று ஏற்­படுமா என்ற அச்­சம் இருந்­ததா," எனக் கேட்­ட­போது, திரு சுரேஷ் இல்லை எனச் சொன்­னார்.

"எனக்­க­ரு­கில் நிற்­கும் யாருக்கு வேண்­டு­மா­னாலும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­க­லாம். தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டோரைப் பார்த்து நான் ஏன் பயப்­ப­ட­வேண்டும்? அவர்­களும் எனது விருந்­தி­னர்­கள்தான்," என்று கூறி­னார்.

இவ­ரின் ஆழ்ந்த ஈடு­பாட்­டிற்கு ஆண்­டின் சிறந்த ஊழி­யர் விருது வழங்­கப்­பட்­டது. கிரு­மிப் பர­வ­லால் பாதிப்பு வந்­த­போ­தும் மனம் தள­ரா­மல் உறு­தி­யு­டன் வேலை செய்த விருந்­தோம்­பல் ஊழி­யர்­க­ளுக்கு இவ்­வி­ரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

விரு­து­க­ளுக்கு தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ரஸ், உணவு பான மற்­றும் சார்­புத் தொழி­லா­ளர்­கள் சங்­கம், சிங்­கப்­பூர் ஹோட்­டல் சங்­கம் ஆகிய அமைப்­பு­கள் இணைந்து ஏற்­பாடு செய்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!