12 பேர் தங்கும் இடத்தில் 39 பேர்

ஊழி­யர்­கள் தங்­கு­வ­தற்கு

ஏற்­பு­டைய இடத்தை வழங்கத்

தவ­றி­ய­தாக 42 வயது சிங்­கப்­பூர் ஆட­வர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. அவ­ருக்கு எதி­ராக மொத்­தம் 11 குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கின. 12 பேர் மட்­டுமே தங்­கக்­கூ­டிய இடத்­தில் 39 வெளி­நாட்டு ஊழி­யர்­களை அடைத்து வைத்­த­தாக லாவ் லியோங் தாய் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

தகுந்த வேலை அனு­மதி அட்டை இல்­லா­மல், வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வரை வேலை­யில் அமர்த்­தி­யது தொடர்­பான குற்­றச்­சாட்டை அவர் எதிர்­நோக்­கு­கி­றார். அனு­மதி பெறா­மல் தனி­யார் வீடு­களை தங்­கு­வி­டு­தி­க­ளாக மாற்­றி­ய­தா­க­வும் அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

தனி­யார் வீடு­க­ளைத் தங்­கு­வி­டு­தி­க­ளாக மாற்­றிய குற்­றம் உட்­பட மூன்று குற்­றச்­சாட்­டு­களை மற்­றொரு சிங்­கப்­பூ­ரரான 58 வயது டே கிம் கியட் எதிர்­நோக்­கு­கி­றார்.

2018ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 3ஆம் தேதி­யன்று கேலாங் லோராங் 23ல் உள்ள இரு மூன்று மாடி கடை­வீ­டு­களில் அதி­ர­டிச் சோதனை நடத்­தி­ய­தில் 12 பேர் இருக்க வேண்­டிய இடத்­தில் 39 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்க வைக்­கப்­பட்­ட­தைக் கண்­டு­பி­டித்­த­தாக நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­ய­மும் மனி­த­வள அமைச்­சும் தெரி­வித்­தன. ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் $10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!