தீமிதி நேர்த்திக் கடன்களுக்கான பதிவு தொடங்கியது

கி. ஜனார்த்தனன்

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரி­யம்­மன் ஆல­யத்­தில் தீமி­தித் திரு­விழா இம்­மா­தம் 24ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று நடை­பெ­ற­வி­ருக்­கிறது. நேற்று தொடங்கிய தீமிதித் திருவிழாவின் இரண்டாம் கட்டப் பதிவு அக்­டோ­பர் 16ஆம் தேதி சனிக்­கி­ழமை இரவு 11.30 மணிக்கு முடி­வு­றும்.

தீமிதித் தி­ரு­வி­ழா­வில் கலந்­து­கொள்ள விரும்­பும் பக்­தர்­கள் https://heb.org.sg/firewalking2021/ என்ற இணை­யத்­த­ளத்­தில் பதிவு செய்­ய­வேண்­டும். அவ்­வாறு பதிவு செய்­யா­தோர் தீமி­தித்­தல் சடங்­கில் பங்­கேற்க அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள்.

முழு­மை­யாகத் தடுப்­பூசி

போட்­டுக்­கொண்­ட­வர்­கள் அல்­லது 'பிஇடி' பரி­சோ­தனை செய்து அதில் கிரு­மித்­தொற்று இல்லை என்று தெரி­விக்­கும் சான்­றைக் காட்­டு­ப­வர்­கள் மட்­டுமே தீமி­தித் திரு­விழா தொடர்­பான நேர்த்­திக் கடன்­களில் பங்­கேற்க முடி­யும். அனைத்து நேர்த்­திக் கடன்­களிலும் பங்­கேற்­போரும் கட்­டா­ய­மாக முன்­ப­திவு செய்­து­கொள்ள வேண்­டும். கோயி­லில் நேர­டி­யாகப் பதிவு செய்ய அனு­மதி இல்லை. 16 வய­துக்­குக் கீழ்ப்­பட்­டோ­ரும் பெண்­களும் தீமி­திக்க அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள்.

16 வய­துக்­கும் 20 வய­துக்­கும் இடைப்­பட்ட ஆண் பக்­தர்­கள் அக்­டோ­பர் 16ஆம் தேதிக்­குள் தங்­க­ளது பெற்­றோர்­ அல்­லது சட்­ட­பூர்வ பாது­காப்­பா­ளர்­க­ளு­டன் ஆல­யத்­திற்­குச் சென்று பதி­வு­செய்ய வேண்­டும். முகக்­க­வ­சங்­களை அணிந்­து­ கொண்டே பக்­தர்­கள் தீமிதி உள்­ளிட்ட சடங்­கு­களில் பங்­கேற்க வேண்­டும் என இந்து அறக்­கட்­டளை வாரி­யம் வலி­யு­றுத்­தி­யது.

பால்­கு­டம், அங்­க­பி­ர­தட்­ச­ணம், கும்­பி­டு­தண்­டம் போன்ற சடங்­கு­

க­ளுக்­கான முன்­ப­தி­வு­கள் ஏற்­கெ­னவே இம்­மா­தம் 1ஆம் தேதி தொடங்­கி­விட்டன.

தற்­போ­தைய கிரு­மிப் ­ப­ர­வல் சூழ­லால் முன்­ப­தி­வு­க­ளின் எண்­ணிக்கை கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டும் என்று வாரி­யம் தெரி­வித்­தது.

தடுப்­பூசி போடாத 12 வய­துக்­குக் கீழ்ப்­பட்ட சிறு­வர்­களும், தடுப்­பூசி போட்­டி­ருந்­தும் அதிக அபா­யத்­துக்­குள்­ளா­கும் வாய்ப்­புள்ள 60 வய­துக்­கும் மேற்­பட்ட முதி­ய­வர்­களும் நேர்த்­திக் கடன்­களில் பங்­கேற்­ப­தைத் தவிர்ப்­பது நல்­லது என்று ஆலோ­சனை கூறப்­ப­டு­கிறது.

இதன் தொடர்­பில் மேல்

விவ­ரம் வேண்­டு­வோர் மேற்­கண்ட இணை­யத்தளத்தை நாட­லாம் அல்­லது 6223 4064 எனும் எண்­ மூலம் ஸ்ரீ மாரி­யம்­மன் ஆல­யத்­து­டன் தொடர்­பு­கொள்­ள­லாம்.

கடந்த ஆண்­டைப்போல அல்­லா­மல் இந்த ஆண்டு தீமி­தித் திரு­வி­ழா­வில் பொது­மக்­கள் கலந்­து­கொள்­வ­தற்­காக இது­போன்ற

கட்­டுப்­பா­டு­கள் தேவைப்­ப­டு­வ­தாக இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி

த. ராஜ­சே­கர் தெரி­வித்­தார்.

"முகக்­க­வ­சத்தை அணிந்­து­கொண்டு பூக்­கு­ழி­யைக் கடப்­பது சிர­மம் என சிலர் ஐயப்­ப­ட­லாம். ஆயி­னும், முன்­னைய ஆண்­டு­

க­ளைப் போல இல்லாது சிராங்­கூன் ரோட்­டி­லுள்ள ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் ஆல­யத்­தி­லி­ருந்து ஸ்ரீ மாரி­யம்­மன் ஆல­யத்­திற்கு நான்கு கிலோ­மீட்­டர் நடக்க வேண்­டி­ய­தில்லை. பகோடா ஸ்தி­ரீட்­டில் பதிவு செய்து அங்­கி­ருந்து 20 மீட்­டர் மட்­டுமே நடந்து ஆல­யத்தை அடை­ய­வேண்­டும். பூக்­கு­ழி­யைக் கடந்து செல்­வ­தற்கு அதி­க­பட்­ச­மாக ஏழு வினா­டி­கள் மட்­டுமே ஆகும். முகக்­க­வ­சத்தை அணிந்து கலந்­து கொள்­வ­தால் அதி­க­மா­னோர் இதில் கலந்­து­கொள்­வ­தற்­கான வாய்ப்பு பெறு­வ­தால் வாரி­யம் இத­னைச் செயல்­ப­டுத்­து­கிறது," என்று திரு ராஜ­சே­கர் கூறி­னார்.

"பதி­வுத் தளம் நேற்று காலை 11.30 மணிக்குத் திறந்­த­போது நான் பதிவு செய்ய முயன்­றேன். இறு­தி­யில் 1.30 வாக்­கில்­தான் அதில் பதிவு செய்ய முடிந்­தது," என்று பாது­கா­வல் அதி­காரி சத்­ய­ராஜ் கிருஷ்­ண­மூர்த்தி, 35, தெரி­வித்­தார். கொவிட்-19 கிரு­மிப்­ ப­ர­வ­லுக்கு முன்பு 10 ஆண்­டு­க­ளாக தீமி­தி­யில் கலந்­து­கொண்ட இவர், எப்­ப­டி­யே­னும் இந்த ஆண்டு கலந்­து­கொள்­ள­வேண்­டும் என்ற வைராக்­கி­யத்­தில் தொடர்ந்து முயன்­ற­தா­கத் தெரி­வித்­தார். "கட்­டுப்­பா­டு­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை நன்கு அறி­வேன். ஆயி­னும், புதி­தாக எந்த இடை­

யூ­றும் வரா­மல் நான் நினைத்­த­படி தீமி­தி­யில் கலந்­து­கொள்­ள­வேண்­டும் என்­பதே எனது பிரார்த்­தனை," என்று அவர் கூறி­னார்.

ஆயி­னும், கட்­டுப்­பா­டு­கள் அதி­கம் இருப்­ப­தால் இந்த முறை போவ­தில்லை என்று 30 ஆண்­டு­க­ளுக்கு மேலாக தீமி­திச் சடங்­கில் கலந்­து­கொள்ளும் போக்­கு­வ­ரத்­துத்­துறை ஊழி­யர் என். ராஜன், 50, தெரி­வித்­தார். "கட்­டுப்­பா­டு­கள் தேவை என்­றா­லும் அவற்­றால் எனது மன திருப்தி குறை­கிறது. எனவே இவ்­வாண்டு திரு­வி­ழா­வில் கலந்­து­கொள்ள விருப்­ப­மில்லை. அடுத்த ஆண்டு நான் கலந்­து­கொள்ள முயற்சி செய்­கி­றேன்," என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!