தீபாவளி அலங்காரத்தை மாற்றவிருக்கும் சன்டெக் சிட்டி

சன்டெக் சிட்டி கடைத்தொகுதியில் பயன்படுத்தப்பட்ட தீபாவளி அலங்காரம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அலங்காரம் மாற்றப்படும் என அக்கடைத்தொகுதி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. அதை முன்னிட்டு சன்டெக் சிட்டி கடைத்தொகுதியில் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில், ‘ஹேப்பி திவாளி’ என்ற அலங்காரத்துடன் கூடிய வாசகம், கடைத்தொகுதியின் நுழைவாயில் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்தது.

அதைப் படமெடுத்த தமிழ் முரசு வாசகரான திரு ஜெயராமன் கோதண்டபாணி, அப்படத்தை தமிழ் முரசுக்கு அனுப்பிவைத்தார்.

சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ஒன்று தமிழ். எனவே, தீபாவளி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக இந்தியாவின் வட மாநிலங்களில் குறிப்பிடுவதைப்போல ‘திவாளி’ என்று எழுதப்பட்டிருப்பது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சன்டெக் சிட்டியிடம் தீபாவளி அலங்காரம் குறித்து கேட்டறிய அக்கடைத்தொகுதி நிர்வாகத்தை தமிழ் முரசு தொடர்புகொண்டது.

சன்டெக் சிட்டி மூத்த நிர்வாகத்திற்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் தொடர்பில் எடுக்கப்படும் முடிவு பற்றி தெரிவிக்கப்படும் என்றும் தமிழ் முரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில், சன்டெக் சிட்டி நிர்வாகம் பின்னர் அளித்துள்ள தகவல் ஒன்றில், தீபாவளி அலங்காரம் நாளை மறுநாளுக்குள் மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!