கான்: வீடுகள் மின்சக்தியை சேமிக்க வேண்டும்

எரி­சக்தி விலை இரட்­டிப்­பா­னதை அடுத்து செல­வு­கள் அதி­க­ரிக்­க­வுள்­ள­தால், மின்­சக்­தியை அள­வு­டன் பயன்­ப­டுத்­தும்­படி வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் சிங்­கப்­பூர் குடும்­பங்­களை அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

புக்­கிட் பாத்­தோக் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முரளி பிள்ளை கேட்ட கேள்­விக்கு திரு கான் நேற்று முன்­தி­னம் நாடாளுமன்­றத்­தில் எழுத்­து­பூர்வ பதில் அளித்­தார்.

எரி­சக்தி விலை கடந்த ஒன்­றரை ஆண்­டு­களில் ஒரு மடங்­குக்கு மேல் அதி­க­மா­கி­விட்­ட­தை­யும் அது சீனா, ஜப்­பான், பிரிட்­டன், ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­கள் உள்­ளிட்­ட­வற்றை பாதித்­துள்­ள­தை­யும் அவர் சுட்­டி­னார்.

உல­களா­விய எரி­சக்­திச் சந்­தை­யில் ஏற்­படும் விலை மாற்­றங்­கள், தனது எரி­சக்­தித் தேவை­களில் கிட்­டத்­தட்ட 100 விழுக்­காட்டை இறக்­கு­மதி செய்­யும் சிங்­கப்­பூ­ரை கட்­டா­யம் பாதிக்­கும் என்று அமைச்­சர் கூறி­னார்.

எரி­சக்தி விலை ஏற்­றம் கார­ண­மாக அடுத்த காலாண்­டில் சிங்­கப்­பூ­ரில் மின்­சக்­திக் கட்­ட­ணம் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­படும் நிலை­யில் அதன் பாதிப்பை மட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள் பற்றி திரு முரளி கேட்­டி­ருந்­தார்.

வீடு­க­ளுக்­கான மின்­சக்­திக் கட்­ட­ணம் அக்­டோ­பர் முதல் டிசம்­பர் வரை 3.1% உயர்த்­தப்­படும் என்று எஸ்பி குழு­மம் கடந்த செப்­டம்­பர் 30ஆம் தேதி அறி­வித்­தது.

கடந்த ஆண்டு ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லான காலாண்­டுக்குப் பின்­னர் மின்­கட்­ட­ணம் இப்­போ­து­தான் இவ்­வ­ளவு அதி­க­மாக உயர்த்­தப்­பட்டுள்ளது.

குறு­கியகால விலை ஏற்­றத்­தின் தாக்­கம் இங்கு சில வழி­களில் குறைக்­கப்­பட்டு வரு­வ­தாக திரு கான் கூறி­னார். ஆனால் நிலை கொண்டுள்ள விலை ஏற்­றத்­தால் சிங்­கப்­பூ­ரில் மின் கட்­ட­ணம் இறுதி­யில் உயரும் என்­றார் அவர்.

தேவைக்கு மிகு­தி­யாக மின்­சக்­தி­யைத் தயா­ரித்­த­தால் கடந்த ஆண்­டு­க­ளாக அதற்­கான செல­வை­விட ஒட்­டு­மொத்த மின்­சக்தியின் விலை குறை­வாக இருந்­தது என்று அமைச்­சர் கூறி­னார்.

ஆனால் தரவு நிலை­யங்­கள், 5ஜி கட்­ட­மைப்­பு­கள், மின்­வா­க­னங்­கள் போன்ற துறை­களில் தேவை அதி­க­ரிக்­கப் போவதால் மின்­கட்­ட­ணம் உய­ரும் என்­று திரு கான் கூறி­னார்.

"வர்த்­த­க­ ரீதியாக நடத்­தப்­படும் எந்த நிறு­வ­னமும் காலைவரையின்றி செல­வை­விட குறைந்த கட்டணத்தில் மின்­சக்­தியை விற்­கப்­போ­வதில்லை," என்­றார் அவர்.

பொதுப் பய­னீட்­டுக் கட்­ட­ணங் ­க­ளைச் சமா­ளிக்க, தகு­தி­பெ­றும் குடும்­பங்­க­ளுக்கு பொருள் சேவை வரி பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­படுவதாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!