புதிய இணையப் பாதுகாப்பு பயிற்சி நிலையம் திறப்பு

இணை­யப் பாது­காப்­புச் செயல்­பாடுகளைக் கையாள்­வ­தன் தொடர்­பில் பயிற்­சி­ய­ளிக்­கும் புதிய பயிற்சி நிலையம் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்கப்­பட்­டுள்­ளது.

ஆசி­யான் நாடு­க­ளின் தேசி­யக் குழுக்­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளிக்க இந்த மையம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஆசி­யான் உறுப்பு நாடு­களுக்­கி­டையே ஆய்வு ஆற்­றல், இணை­யப் பாது­காப்பு உத்­தி­களை வளர்ப்­பது, சட்­டங்­களை வரை­வது ஆகிய அம்­சங்­களை வலுப்­ப­டுத்­து­வது 'ஆசி­யான்-சிங்­கப்­பூர் சைபர்­செக்­கி­யூ­ரிட்டி செண்­டர் ஆஃப் எக்­சலன்ஸ்' எனப்­படும் ஆசி­யான்-சிங்கப்­பூர் இணை­யப் பாது­காப்பு வல்­லமை மையத்தின் புதிய நிலையத்தின் இலக்கு. ஆசி­யான் இணை­யப் பாது­காப்பு அமைச்­சர்­நிலை மாநாட்­டில் தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ மையம் திற்­றக்­கப்­ப­டு­வ­தைப் பற்றி அறி­வித்­தார்.

இந்நிலையம் குறித்து முத­லில் 2018ஆம் ஆண்­டில் அறி­விக்­கப்­பட்டது. சென்ற ஆண்டு ஏப்­ரல் மாதம் நிலையம் செயல்படத் தொடங்­கி­யது.

ஆனால் கொவிட்-19 கிருமிப் பர­வல் சூழ­லால் இதன் அதி­கா­ர­பூர்­வத் திறப்பு நிகழ்ச்சி ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

இணை­யப் பாது­காப்பு வல்­லமை மையத்தின் மற்­றொரு பயிற்சி வசதி தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் அமைந்­துள்­ளது.

அது 2019ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் திறக்­கப்­பட்­டது.ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளின் இணையப் பாதுகாப்பு ஆற்றலை வளர்க்க சிங்கப்பூர் 10 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள ஆசியான் இணையப் பாதுகாப்புத் திட்டத்தை வரைந்தது. சிங்கப்­பூர் இணை­யப் பாது­காப்பு வல்­லமை மையம் அதை விரிவுபடுத்தப்படுகிறது.

2023ஆம் ஆண்டு வரை­ நி­லை­யத்­திற்கு நிதி­யு­தவி வழங்க சுமார் 30 மில்­லி­யன் வெள்ளி ஒதுக்­கப்­பட்­டது.

ஆசி­யான் நாடு­களில் இணை­யப் பாது­காப்பு தொடர்­பி­லான விவ­கா­ரங்­க­ளைக் கையாள தொழில்­நுட்­பம் ரீதி­யான பயிற்­சி­களை மையம் வழங்­கு­கிறது. இணை­யத் தாக்­கு­தல்­கள், மிரட்­டல்­கள், சிறந்த செயல்­மு­றை­கள் ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் பொது­வா­கக் கிடைக்­கக்­கூ­டிய தக­வல்­கள் சம்­பந்­தப்­பட்ட குழுக்­க­ளுக்­கி­டையே பகிர்ந்­து­கொள்­ளப்­ப­டு­வ­தை­யும் மையம் ஊக்கு­விக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!