பெரிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. ஆனால் மற்ற பிரிவுகளில் கட்டணங்கள் குறைந்தன.
1,600 லிட்டருக்கும் அதிகமான கொள்ளளவைக் கொண்ட பெரிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 70,200 வெள்ளியாகப் பதிவானது. அது, இரண்டு வாரங்களுக்கு முன் 68,310 வெள்ளியாக இருந்தது. அதனுடன் தொடர்புடைய பொதுப் பிரிவுக்கான கட்டணம் 70,002 வெள்ளியிலிருந்து 72,756 வெள்ளியாக அதிகரித்தது. 1,600 லிட்டருக்குக் குறைவான கொள்ளளவைக் கொண்ட கார்களுக்கான கட்டணம் 47,001 வெள்ளியாகப் பதிவானது. இதற்கு முன் இப்பிரிவுக்கான கட்டணம் 48,000 வெள்ளியாக இருந்தது.
வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் 110 வெள்ளி குறைந்து 38,890 வெள்ளியாகப் பதிவானது. மோட்டார்சைக்கிள்களுக்கான கட்டணம் 9,089லிருந்து குறைந்து 9,052 வெள்ளியாகப் பதிவானது.
பணக்கார வாடிக்கையாளர்களிடையே வாகனங்களுக்கான தேவை அதிகம் இருப்பதாலும் பொதுவாக வலுவிழந்திருக்கும் சந்தையால் அவர்கள் பாதிக்கப்படாததாலும் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் இவ்வாறு பதிவாகியிருப்பதாக இத்துறையின் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.