காதல் மோசடி மூலம் குற்றம் புரிந்ததாகச் சந்தேகம்

காதல் மோசடி செய்து அதன் மூலம் கள்­ளப் பணத்தை நல்­ல பண­மாக்­கி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 23 வயது ஆட­வர் கைது­செய்­யப்­பட்­ட­தா­கப் போலி­சார் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்ளனர்.

சென்ற ஆண்டு ஜன­வரி மாதம், காதல் மோச­டிக்கு ஆளா­ன­தாக ஒரு பெண் புகார் தந்­தா­ர் என்று அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது. தன்னை அமெ­ரிக்­கா­விலிருந்து வந்த மருத்­து­வர் என்­றும் தான் சிங்­கப்­பூ­ரில் வாழத் திட்­ட­மிட்­டி­ருந்­த­தா­கவும் சொன்ன ஓர் ஆட­வ­ரு­டன் நட்பு வைத்­துக்­கொண்­ட­தாக அப்­பெண் கூறி­யிருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ருக்கு வர­வி­ருந்­த­தா­கச் சொல்­லி­ய­தை­யொட்டி தனது உடை­மை­க­ளைக் கொண்ட பொட்­ட­லங்­களை பெண்­ணுக்கு அனுப்­பப்­போ­வ­தாக ஆட­வர் கூறி­யி­ருக்­கி­றார். அவற்­றுக்­குக் காத்­தி­ருக்­கும் வேளை­யில் தெரி­யாத தனி­ந­பர்­களி­ட­மி­ருந்து பெண்­ணுக்­குத் தொலை­பேசி அழைப்­பு­கள் வந்­தி­ருக்­கின்­றன. பொட்­ட­லங்­கள் மலே­சி­யா­வில் சிக்­கி­யி­ருந்­த­தா­க­வும் அவற்றை அனுப்ப பணம் செலுத்­த­வேண்­டும் என்­றும் அவர்­கள் கூறி­யி­ருக்­கின்றனர். அத­னைத் தொடர்ந்து பெண் ஆட­வ­ரின் வங்­கிக் கணக்­கிற்கு 15,000 வெள்ளியை அனுப்­பி­யி­ருக்­கி­றார்.

குற்­றச் செய­லின் மூலம் பல­னடைந்­த­தாக ஆட­வர் மீது இன்று இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­படும். குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்டால் அவ­ருக்கு அதி­க­பட்­ச­மாக 10 ஆண்­டுச் சிறைத் தண்­டனை, ஐநூ­றா­யி­ரம் வெள்ளி அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­படலாம்.

இச்சம்பவத்திற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்புதான் பெரிய அளவிலான காதல் மோசடி ஒன்று முறியடிக்கப்பட்டது. சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளின் போலிசாரும் இணைந்து அதை முறியடித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!