சிராங்கூன் சாலை கடையை உடைத்துத் திருட முயற்சி; ஆடவர் கைது

சிராங்கூன் சாலையில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கடை ஒன்றை உடைத்துத் திருட முயற்சி செய்த 29 வயது ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்தனர்.

அந்தக் கடையின் முகப்புக் கண்ணாடி சேதமடைந்து காணப்பட்டது. அந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில் போலிசுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணை மற்றும் போலிஸ் கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகள்மூலம், மத்திய போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தை உறுதிசெய்தனர். போலிசிடம் புகார் அளிக்கப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்த ஆடவரிடமிருந்து ஓர் இணை கையுறைகள், சுத்தியல் உள்ளிட்ட பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த ஆடவர்மீது இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 7) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

கடையை உடைத்துத் திருட முயற்சி செய்ததாக குற்றம் நிரூபிக்கப்படால் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!