தொடக்கப் பள்ளிகளில் திங்கள் முதல் கட்டம் கட்டமாக நேரடி வகுப்புகள் சான் சுன் சிங்: எல்லா மாணவர்களுக்கும் வீட்டிலிருந்து கற்க உகந்த சூழல் இருக்காது

வரும் திங்­கட்­கி­ழமை 11ஆம் தேதி­யி­லி­ருந்து தொடக்­கப் பள்­ளி­களில் நேரடி வகுப்­பு­கள் கட்­டம் கட்­ட­மாகத் தொடங்­கும் என்று கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

சிறப்­புத் தேவை­யுள்­ளோ­ருக்­கான பள்­ளி­களில் நேரடி வகுப்­பு­கள் கட்­டம் கட்­ட­மா­கத் தொடங்கு­ வது பற்றி கூடு­தல் விவ­ரம் பின்­னர் அளிக்­கப்­படும் என்­றும் அமைச்சு நேற்று கூறி­யது.

கடந்த செப்­டம்­பர் 27ஆம் தேதி­யி­லி­ருந்து தொடக்­கப் பள்ளி ஒன்று முதல் ஐந்து வரை­யி­லான மாண­வர்­களும் சிறப்­புத் தேவை­யுள்ள மாண­வர்­களும் வீட்­டி­லி­ருந்து பாடங்­க­ளைக் கற்று வரு­கின்­ற­னர்.

பள்­ளி­களில் கிருமி பர­வும் அபா­யத்­தைக் குறைக்­க­வும் தடுப்­பூசி போட முடியாத 12 வய­துக்­குக் கீழ் உள்ள பிரி­வி­ன­ரைப் பாது­காக்­க­வும் அந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

மேலும், தொடக்­கப்­ பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்வு எழு­திய மாண­வர்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டு­ வதைத் தவிர்ப்­ப­தும் அதன் நோக்­கம் என்று அமைச்சு தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில் எல்லா மாண­வர் ­க­ளுக்­கும் வீட்­டி­லி­ருந்து கற்­ப­தற்­கான உகந்த சூழல் இருக்­காது என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தார்.

நீண்ட நாட்­களுக்கு வீட்டிலிருந்து பாடங்­களைக் கற்­றால் அவர்­க­ளின் கல்­வித்­தி­றன், சமூக-மன­ந­லன் ஆகி­யவை பாதிக்­கப்­ப­ட­லாம் என்று அமைச்­சர் கூறி­னார்.

நேரடி வகுப்­பு­கள் தொடங்­கப் ­ப­டு­வது பற்­றிய அறி­விப்பு வந்­ததை அடுத்து திரு சான் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் அவ்­வாறு தெரி­வித்­தார்.

இவ்வேளையில் பள்­ளித் திறப்பு பற்­றி கூடு­தல் விவ­ரங்­களைக் கல்வி அமைச்சு தெரிவித்தது.

வரும் அக்­டோபர் 22ஆம் தேதி பள்ளிகளுக்கு விடு­முறை அளிக்­கப்­படும். அதற்கு முந்­திய நாள்­தான் தொடக்­கப் பள்ளி இறு­தி­யாண்டு தேர்­வு­க­ளைத் திருத்­தும் பணி முடி­வு­றும்.

இத­னால் வரும் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மாண­வர்­கள் பள்ளி செல்ல தேவை­யில்லை. வீட்­டி­லி­ருந்தபடி கற்கும் பாடங்­களும் நடை­பெ­றாது.

மேலும் தொடக்­க­நிலை ஒன்று முதல் ஐந்து வரை­யி­லான மாண­வர்­களுக்கு அவர்­க­ளின் பெற்­றோர் இன்று அல்­லது நாளை விரைவுக் கிரு­மிப் பரி­சோ­த­னை­க­ளைச் செய்ய வேண்­டும்.

முடி­வு­களை, தங்­க­ளுக்கு அனுப்­பப்­படும் இணையத் ­தொ­டர்­பில் அவர்­கள் சமர்ப்­பிக்க வேண்­டும்.

இத்­து­டன், துணைப்­பாடங்கள், செறி­வூட்­டல், தனி­யார் கல்வி ஆகியவற்றுக்கான நிலை­யங்­கள் வரும் திங்­கட்­கி­ழமை செயல்­ப­டத் தொடங்­க­லாம். ஆனால் முடிந்­த­வரை இணை­யம் வழி­யா­க வகுப்பு ­களை நடத்தும்படி கல்வி அமைச்சு அவற்­றை ஊக்­கு­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!