வீவக மறுவிற்பனைப் பரிவர்த்தனைகள் குறைவு

சென்ற மாதம் குறை­வான எண்­ணிக்­கை­யில் வீவக மறு­விற்­பனை வீட்­டுப் பரி­வர்த்­த­னை­கள் பதி­வா­யின.

விலை­கள் கடந்த சில ஆண்டு­க­ளாக இல்­லாத உச்­சத்­தைத் தொட்­ட­தைத் தொடர்ந்து மக்­கள் வீவக மறு­விற்­பனை வீடு­களை வாங்­கத் தயங்­கு­வ­தற்கு அறி­கு­றி­யாக இது கரு­தப்­ப­டு­கிறது.

சென்ற மாதம் 2,518 வீவக மறு­விற்­பனை வீட்­டுப் பரி­வர்த்­த­னை­கள் இடம்­பெற்­றன. கடந்த ஆகஸ்ட் மாதம் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் இந்த எண்­ணிக்கை 8.4 விழுக்­காடு குறைவு என்று சிங்­கப்­பூர் சொத்­துச் சந்தை நிறு­வ­னம் வெளி­யிட்ட தக­வல்­களில் குறிப்­பி­டப்­பட்டது.

எனி­னும், ஆகஸ்ட் மாதம் இருந்­தத­தைக் காட்­டி­லும் வீவக மறு­விற்­பனை வீட்டு விலை­கள் 0.9 விழுக்­காடு அதி­க­ரித்­தன. மாத அடிப்­ப­டை­யில் சுமார் எட்­டரை ஆண்­டு­களில் இல்­லாத விகி­தத்­தில் விலை­கள் அதி­க­ரித்­தன. இதற்கு முன் 2013ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் விலை­கள் 0.8 விழுக்­காடு அதி­க­ரித்­த­து­தான் ஆக அதி­க­மாக இருந்­தது.

தொடர்ந்து 15 மாதங்­க­ளாக வீவக மறு­விற்­பனை வீட்டு விலை­கள் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளன.

முதிர்ச்­சி­ய­டைந்த, முதிர்ச்சி­யடை­யாத இரண்டு வகை பேட்­டை­க­ளி­லும் எல்லா மறு­விற்­பனை வீட்டு விலை­களும் அதி­க­ரித்­தன.

சென்ற மாதம் 23 வீவக வீடு­கள் குறைந்­தது ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்கு விற்­கப்­பட்­டன. ஆகஸ்ட் மாதம் அத்­த­கைய 26 பரி­வர்த்­த­னை­கள் இடம்­பெற்­றன.

சென்ற மாதம் இடம்­பெற்ற அனைத்து மறு­விற்­ப­னைப் பரி­வர்த்­த­னை­களில் 0.9 விழுக்­காடு மட்­டுமே ஒரு மில்­லி­யன் வெள்ளிக்கு விற்­கப்­பட்ட வீடு­க­ளுக்கானவை. இவ்­வாண்டு மொத்­தம் 174 வீவக வீடு­கள் ஒரு மில்­லி­யன் வெள்ளி அல்­லது அதற்­கும் அதி­க­மான தொகைக்கு விற்­கப்­பட்­டன.

ஆண்டு அடிப்படையில் அத்தகைய பரிவர்த்தனைகள் 278.3 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!