அறப்பணிக்கு 367,000 வெள்ளி வழங்கும் ‘சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்’, ‘சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் அறநிறுவனம்’

'சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ்' நிறு­வ­னம், 'சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் அற­நி­று­வ­னம்' ஆகிய இரண்­டும் இவ்­வாண்டு 367,000 வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகையை அறப்­ப­ணிக்கு வழங்­க­வுள்­ளன. இத்­தொ­கை­யில் 200,000 வெள்ளி சமூக உண்­டி­ய­லின் ஆத­ர­வில் இயங்­கும் 20 சமூக சேவை அமைப்­பு­க­ளுக்­குச் செல்­லும்.

ஆத­ரவு தேவைப்­படும் மூத்­தோர் மற்­றும் குடும்­பங்­கள், சிறப்­புத் தேவை­க­ளு­டைய சிறு­வர்­கள் உள்ளிட்­டோ­ருக்கு முக்­கி­ய­மான திட்­டங்­களை வழங்க இந்­தத் தொகை பயன்­ப­டுத்­தப்­படும் என்று நேற்று வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது.

100,000 வெள்ளி 'ஸ்பெ­ஷல் எட்யுகேஷன் ஃபைனேன்­ஷி­யல் அசிஸ்­டன்ஸ் ஸ்கீம்' எனப்­படும் சிறப்­புக் கல்வி நிதி­யு­த­வித் திட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்க உப­யோகிக்­கப்­படும்.

எஞ்­சிய தொகை, குறைந்த வசதி உள்ள சிறு­வர்­க­ளுக்கு உதவும் 'சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ்'ஸின் இதர நிதித் திட்­டங்­களுக்கு விநி­யோ­கிக்­கப்­படும்.

நல்­லது செய்வது தொடர்ந்து 'சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ்'ஸின் செயல்­பாட்­டின் முக்­கிய அங்­கம் வகிக்­கிறது என்­றும் வசதி குறைந்­தோ­ருக்கு உதவ முடிந்த உத­வி­யைச் செய்ய நிறு­வ­னம் எண்­ணம் கொண்­டுள்­ள­தா­க­வும் 'சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ்', 'சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ்' அற­நி­று­வ­னம் ஆகி­யவற்­றின் தலை­வர் டாக்­டர் லீ பூன் யாங் கூறி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!