இரண்டே மாதத்தில் பாண்டா குட்டிக்குப் பிஞ்சுப் பற்கள்

சிங்கப்பூரில் பிறந்த முதல் பாண்டா குட்டிக்கு அழகிய பற்கள் வரிசை யாக தோன்றியுள்ளன. விரைவில் தனக்குப் பிடித்த உணவான மூங் கில் குச்சிகளை அது ருசி பார்க் கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாதமே ஆன குட்டிக் குக் கீழ் வரிசையில் நான்கு பற் களும் மேல் வரிசையில் இரண்டு பற்களும் முளைத்துள்ளன. “பொதுவாக பிறந்து மூன்று மாதங்களில் பாண்டா குட்டிகளுக்கு பற்கள் முளைக்கத் தொடங்கும். அதன் பிறகு ஏழு மாதங்களில் மூங்கில்களை மென்றுத் தின்ன குட்டிகள் முயற்சி செய்யும். ஆனால் சிங்கப்பூரில் பிறந்துள்ள பாண்டா குட்டிக்கு இரண்டு மாதங்களிேலயே பற்கள் முளைத்துவிட்டதால் எதிர் பார்த்ததற்கு முன்பாகவே மூங்கில் களைச் சாப்பிடத் தொடங்கும்,” என்று நேற்று வெளியிட்ட அறிக் கையில் சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!