கவனக்குறைவு: பேருந்து ஓட்டுநருக்கு $1,500 அபராதம்

எஸ்­பி­எஸ் பொதுப்­பே­ருந்து ஓட்­டு­நர், கவ­னக்­கு­றை­வாக நடந்­து­கொண்­ட­தால் பயணி ஒரு­வ­ருக்கு காயம் ஏற்­பட நேர்ந்­தது. அதற்­காக அந்த ஓட்­டு­ந­ருக்கு நேற்று $1,500 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

அந்­தப் பேருந்து ஓட்­டு­நர், தனது பேருந்­துக்­கும் அவ்­வ­ழியே சென்ற காருக்­கும் இடையே பாது­காப்­பான இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கத் தவ­றி­விட்­டார். அதன் கார­ண­மாக ஏற்­ப­ட­வி­ருந்த மோத­லைத் தவிர்க்க, பேருந்­தின் வேகத்­தடை விசையை அழுத்­தி­னார். அப்­போது பேருந்து திடீ­ரென நிறுத்­தப்­பட்­ட­தால் அதில் இருந்த 60 வயது பயணி ஒரு­வர் கீழே விழுந்தார். அதில் அவருக்கு ஒன்­றுக்கு மேற்­பட்ட காயங்­க­ளு­ம் முதுகு எலும்பு முறி­வும் ஏற்­பட்­டது. அதன் கார­ண­மாக அவர் மிகுந்த மன உளைச்­ச­லுக்கு ஆளா­ன­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பேருந்து ஓட்­டு­நர் 64 வயது ஓங் சுவான் ஹை, நேற்று முன்­தி­னம் தனது குற்­றத்தை நீதி­மன்­றத்­தில் ஒப்புக்­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ர­ரான அவ­ருக்கு இரண்டு மாதங்­க­ளுக்கு வாக­னம் ஓட்­டத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போல் பேருந்­துக்­க­ருகே சென்ற கார் ஓட்­டு­நரான 65 வயது டேங் டோ பியூ தமது பயணி குமாரி இந்­தி­ராணி கோவிந்­த­சா­மிக்கு காயம் ஏற்­ப­டுத்­தி­ய­தாக அவர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் 2019 மே மாதம் 30 ஆம் தேதி, மாலை 5,30 மணிவாக்­கில் தெம்­ப­னிஸ் அவென்யூ 7, புளோக் 370க்கு அருகே நிகழ்ந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!